»   »  ஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள் 'கலர்புல்'...பாராட்டும் ரசிகர்கள்

ஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள் 'கலர்புல்'...பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, ராணா, சமந்தா, ராய் லட்சுமி மற்றும் பார்வதி ஆகியோரின் நடிப்பில் உருவான பெங்களூர் நாட்கள் திரைப்படம் இன்று தமிழில் வெளியாகியிருக்கிறது.

பாபாநாசம்(திரிஷ்யம்) ஷட்டர்(ஒரு நாள் இரவில்) படங்களைத் தொடர்ந்து மற்றுமொரு ரீமேக் படமாக தமிழில் வெளிவந்திருக்கிறது பெங்களூர் நாட்கள்.


வெற்றிமாறனின் விசாரணை, பிரசாந்தின் சாஹசம் ஆகிய படங்களுடன் இன்று வெளியாகியிருக்கும் பெங்களூர் நாட்கள் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.


பலே பல்லாளத் தேவா

"என்ன ஒரு உருமாறும் தன்மை! பல்லாளத் தேவனிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பெங்களூர் நாட்கள் படத்தில் ராணா நடித்திருக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரா, படம் உண்மையிலேயே நன்றாக இருந்தது" என்று படத்தையும், ராணாவையும் ஒருசேர வாழ்த்தியிருக்கிறார் சதீஷ்.


இசை மற்றும் பாடல்கள்

"பெங்களூர் டேஸ் படத்தைப் பார்க்காத தமிழ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இப்படம் புதிதாக இருக்கும். பாடல்கள் மற்றும் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன" என்று பிரவீன் பதிவிட்டிருக்கிறார்.


3 நண்பர்களின்

"3 நண்பர்களின் வாழ்கையை எடுத்துக் கூறும் படம் தான் பெங்களூர் நாட்கள். சரண்யா, பார்வதி மற்றும் ஸ்ரீதிவ்யா தங்களின் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்" என்று பாராட்டியிருக்கிறார் சதீஷ்.


ரொம்ப நாளைக்கு

"பெங்களூர் நாட்கள் ஆர்யாவை மீட்டிருக்கிறது. ரொம்ப நாளைக்கு அப்புறம் அவ்ளோ உணர்ச்சி வசப்பட்டு இந்தப் படத்தை பார்த்தேன். படத்துக்கு என்னோட மதிப்பெண் 4/5" என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருக்கிறார் நந்தகுமார்.


English summary
Arya, Rana Daggubati and Sridivya Starrer "Bangalore Naatkal" was Released Worldwide on Today, Written and Directed by Bommarillu Bhaskar - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil