காணாமல் போன நடிகை... சாக்கு மூட்டையில் பிணமாக மீட்பு… நடந்தது என்ன ?

பங்களாதேஷ் : சாலையோரம் சாக்கு மூட்டையில் நடிகை சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சாக்கு மூட்டையில் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளது .வங்கதேச திரையுலகினரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது-

நடிகை ரைமா இஸ்லாம் ஷிமுவுக்கு என்ன நடந்தது, அவரை கொலை செய்து உடலை அப்புறப்படுத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு

நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு

45 வயதான ரைமா இஸ்லாம் ஷிமு 1998ம் ஆண்டு பார்டமன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். வங்காளதேச நடிகையான இவர் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பங்களாதேஷ் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராக இருந்துள்ளார். திரைப்படங்களைத் தவிர பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சாக்கு மூட்டையில்

சாக்கு மூட்டையில்

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ரைமா காணாமல் போனதாக, அவரது உறவினர்கள் கெரனிகஞ்ச் மாடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, திங்கட்கிழமை, டாக்காவின் கெரனிகஞ்சில் உள்ள ஒரு பாலத்தின் அருகே ஒரு சாக்கு மூட்டையில், நடிகை ரைமாவின் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

கணவருக்கும் தொடர்பு

கணவருக்கும் தொடர்பு

இதையடுத்து, நடிகை ரைமாவின் கணவர் ஷகாவத் அலி நோபாலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலையில் தனக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஷகாவத் அலியின் நண்பர் அப்துல்லா ஃபர்ஹாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் செல்வாக்கு மிக்க நடிகர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பங்களாதேஷ் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

உடலில் பல காயங்கள்

உடலில் பல காயங்கள்

நடிகை ரைமாவின் உடலில் காணப்பட்ட காயங்கள் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது என்றும், அதைத் தொடர்ந்தே அவர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் வைத்து வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், உடல் பிரேத பரிசோதனைக்காக சர் சலிமுல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X