twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புனித குரானை கொச்சைப்படுத்தியதா ’நவரசா’வின் இன்மை? #BanNetflix டிரெண்ட் செய்து கடும் கண்டனம்!

    |

    சென்னை: ஒடிடி தளங்களில் புதிதாக எந்த ஒரு படைப்பு வந்தாலும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளையும் கூடவே ரிலீஸ் செய்து வருகின்றன.

    சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த் என முன்னணி நடிகர்கள் பலர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் நேற்று வெளியானது நவரசா ஆந்தாலஜி.

    காஞ்சனா கிழவியோட பேத்திதான் துர்கா.. மறுபடியும் பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. நெட்டிசன்ஸ் மரண கலாய்! காஞ்சனா கிழவியோட பேத்திதான் துர்கா.. மறுபடியும் பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. நெட்டிசன்ஸ் மரண கலாய்!

    அதில், இடம்பெற்ற இன்மை குறும்படத்தின் விளம்பர போஸ்டரில் புனித குரானை கொச்சைப்படுத்தியதாக இஸ்லாமியர்கள் நெட்பிளிக்ஸிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நவரசா வெப்சீரிஸை நீக்க வேண்டும் என்றும் #BanNetflix என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    புளி ரசம்

    புளி ரசம்

    பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்கிற ட்ரோல் நிச்சயம் நவரசாவிற்கு பொருந்தும் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். 9 இயக்குநர்கள் உருவாக்கிய 9 கதைகளில் ஒரு சில மட்டுமே வொர்க்கவுட் ஆகி இருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நாட்களில் பெரிய நடிகர்களை வைத்து எடுத்ததால் தான் எந்த ரசமும் ருசிக்காமல் புளிக்கிறது.

    சர்ச்சையை கிளப்பிய சித்தார்த் படம்

    சர்ச்சையை கிளப்பிய சித்தார்த் படம்

    நடிகர் சித்தார்த் என்றாலே சர்ச்சை என்பது போல அவர் நடிப்பில் வெளியான இன்மை குறும்படம் மிகப்பெரிய இம்சையையும் ஒட்டுமொத்த நவரசாவிற்கும் நெட்பிளிக்ஸிற்கும் கொடுத்துள்ளது. திகில் படமாக உருவாகி உள்ள இன்மை படத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலை கொச்சைப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

    புனித குரான்

    புனித குரான்

    இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் வாசகங்களை இன்மை குறும்படத்தின் போஸ்டரில் பயன்படுத்தி இருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. விளம்பரத்திற்காக புனித குரான் வாசகங்கள் பயன்படுத்த இஸ்லாமியர்கள் தடை விதித்து உள்ள நிலையில், இயக்குநர் ரதீந்திரன் ஏன் இப்படி செய்தார் என்கிற கேள்விகளை பலரும் எழுப்பி உள்ளனர்.

    நெட்பிளிக்ஸுக்கு தடை

    நெட்பிளிக்ஸுக்கு தடை

    நெட்பிளிக்ஸ் துபாயின் புர்ஜ் கலிஃபா வரை பிரம்மாண்டமாக செலவு செய்து நவரசாவிற்கு விளம்பரம் செய்துள்ள நிலையில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கொச்சைப்படுத்தியதற்காக நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தை தடை செய்ய வேண்டும் என #BanNetflix என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    பிசினஸ் பண்ணாதீங்க

    பிசினஸ் பண்ணாதீங்க

    புனித நூலான குரானை கொச்சைப்படுத்தி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டாம். இஸ்லாம் மதம் என்டர்டெயின்மென்ட்டுக்கானது அல்ல என புனித குரான் புகைப்படங்களை ஷேர் செய்து ஏகப்பட்ட இஸ்லாமிய நண்பர்கள் நவரசாவிற்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பி உள்ளனர்.

    இதே வேலையா போச்சு

    இதே வேலையா போச்சு

    சாக்ரட் கேம்ஸ் வெப்சீரிஸ் வெளியான போதும் நெட்பிளிக்ஸை தடை செய்ய வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். தொடர்ந்து இதே போல பிற மதங்களை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு தான் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஒடிடி தளங்கள் செயல்பட்டு வருவதாகவும் கண்டனங்கள் கிளம்பி வருகின்றன.

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மேலும், நடிகர் சித்தார்த் மற்றும் இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்டோர் குரான் வாசகங்களை விளம்பரத்திற்காக பயன்படுத்தியதற்காக இஸ்லாமிய அமைப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    கத்ரீனா பிரச்சனை

    கத்ரீனா பிரச்சனை

    புனித பைபிளை கொச்சைப்படுத்தியதாக நடிகை கத்ரீனா கைஃபுக்கு எதிராகவும் சமீபத்தில் கிறிஸ்துவர்கள் பெரும் கண்டன குரலை எழுப்பி இருந்தனர். பிரெக்னன்ஸ் பைபிள் என்கிற பெயரில் அவர் வெளியிட்ட புத்தகத்திற்கு எதிராக அந்த கண்டனங்கள் கிளம்பின.

    ஃப்ரீ பப்ளிசிட்டி

    ஃப்ரீ பப்ளிசிட்டி

    ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டால் இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டே வியாபார நோக்கத்திற்காகவே இது போல் கடவுள் நம்பிக்கைகள் மீது கை வைத்து விளையாடி வருகின்றனர் என்றும், என்ன செய்தாலும், எத்தனை கண்டனங்களை தெரிவித்தாலும் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் பாயாது என்பதற்காக இப்படி செய்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

    சித்தார்த் ட்வீட்

    சித்தார்த் ட்வீட்

    நவரசாவில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை பார்வதி நடிப்பில் வெளியான இன்மை படத்தின் விளம்பர போஸ்டர் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புர்ஜ் கலிஃபாவில் யாருன்னு பாருங்க என தனது புகைப்படம் புர்ஜ் கலிஃபாவில் இடம்பெற்றிருக்கும் போட்டோவை ஷேர் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

    அவுட்ஸ்டாண்டிங்

    அவுட்ஸ்டாண்டிங்

    விளம்பரம் காரணமாக ஏற்பட்ட கண்டனத்தை தவிர்த்து இன்மை குறும்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சித்தார்த் மற்றும் பார்வதி நடிப்பில் இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ள இன்மை படமும் இந்த நவரசா ஆந்தாலஜியில் பாஸ் மார்க் வாங்கி இருக்கு.

    English summary
    Muslim people trending #BanNetflix after Navarasa’s Inmai movie promotion poster having Quran verses. Siddharth and Parvati starring in Inmai short film grabs fans attention also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X