ரம்யா கிருஷ்ணன் கணவரின் முதல் காதலி பானுப்ரியாவா? காதல் முறிந்ததற்கு காரணம்?
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் 40 வருடங்களாக முன்னணி நடிகையாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டே இருக்கிறார். இவரது கணவர் கிருஷ்ணவம்சி, பானுப்ரியாவை உருகி உருகி காதலித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன்: நடிகை ரம்யா கிருஷ்ணன் எட்டாவது படித்துக்கொண்டு இருக்கும் போதே தனது 14 வயதில் வெள்ளைமனசு என்கிற படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து, அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரை பிரபலமாக்கிய திரைப்படம் முதல்வசந்தம் படம் தான். இந்த படத்தில் இடம் பெற்ற ஆழம் அது ஆழம் இல்ல என்ற பாடல் ரம்யா கிருஷ்ணனை பட்டி தொட்டி எங்கும் தெரியவைத்தது.

காதல் திருமணம்: தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன், கிருஷ்ணவம்சி இயக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயம், சந்திரலேகா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ரம்யா கிருஷ்ணனின் இரண்டு படங்களை இயக்கிய கிருஷ்ணவம்சியின் மேல் அவருக்கு காதல் வந்ததைத் தொடர்ந்து, அவரை திருமணம் செய்து கொண்டார். ரம்யா கிருஷ்ணனுக்கு ஏற்கனவே யூகிசேதுவுடன் திருமணம் நடந்து அது விவாகரத்தான நிலையில் இரண்டாவதாக இவரை திருமணம் செய்து கொண்டார்.
பானுப்ரியா: இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணவம்சி, நடிகை பானுப்ரியாவை துரத்தி துரத்தி காதலித்ததாக வீடியோவில் பேசி உள்ளார். அதில், நடிகை பானுப்ரியாவை பாக்யராஜ் தனது படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்ய நினைத்தார். ஆனால், அப்போது அவர் மிகவும் சிறு பெண்ணாக இருந்ததால், அது முடியாமல் போய்விட்டது. இதையடுத்து, மெல்ல பேசுங்கள் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
முதல் காதலி: இதையடுத்து, முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் ஆதர்ஷ் கௌசல் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டு, குழந்தையோடு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அப்போது தான் இயக்குநர் கிருஷ்ண வம்சி, பானுப்ரியாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்து, அவரை துரத்தி துரத்தி காதலித்தார்.
காரணம் இதுதான்: ஆனால் பானுப்ரியா வம்சியை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. இதற்கான காரணத்தை அவர் கூற மறுத்துவிட்டார். இதன் பிறகு தான் கிருஷ்ணவம்சி, ரம்யா கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











