சென்னை ஸ்டார் ஹோட்டலில் ரகளை.. நடனப் பெண்ணைத் தாக்கியதாக பிரபல இயக்குநர் மீது வழக்குப்பதிவு
டார்லிங் 2 பட இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடனமாடும் பெண்ணிடம் ரகளை செய்ததாக டார்லிங் 2 பட இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலையரசன் நடிப்பில் டார்லிங் 2 படத்தை இயக்கியவர் சதீஷ் சந்திரசேகரன். இவர் தனது நண்பர்களுடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள பார் வசதியுடன் கூடிய பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு நேற்று மது அருந்த சென்றுள்ளார்.

அங்கு அவர் மது போதையில், ஓட்டலில் நடனமாடும் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்பெண்ணை அவர் தாக்கியதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications