தண்ணீருக்கு அடியில் கர்ப்பகால ஃபோட்டோஷுட்...அசத்தும் பாரதி கண்ணம்மா வெண்பா

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் மிக பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பரபரப்பு, விறுவிறுப்பு ஆகியவற்றிற்கு பஞ்சமின்றி ரசிகர்களை ஈர்த்துள்ள சீரியல். சீரியல் ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பதும் இந்த சீரியல் தான். மலையாளத்தில் ஒளிபரப்பான கருத்தமுத்து டிவி சீரியலின் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா என்றாலும் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை இந்த சீரியல் பெற்றுள்ளது.

2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் 555 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது. இதில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும், வெண்பாவாக ஃபரீனா ஆசாத்தும் நடித்து வருகின்றனர். இதில் ஹீரோயின் கண்ணம்மாவிற்கும் இருக்கும் அளவு ரசிகர்கள் கூட்டம் வில்லி வெண்பாவிற்கும் உண்டு.

சுவாரஸ்யமான பாரதி கண்ணம்மா

சுவாரஸ்யமான பாரதி கண்ணம்மா

பாரதியை ஒரு தலையாக காதலிக்கும் வெண்பா, அவரை திருமணம் செய்து கொள்ள பல சதி வேலைகளை செய்கிறார். இந்த சதித் திட்டத்தால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து சென்கிறார்கள். இருந்தாலும் பாரதியை அடைய ரவுடிகள் உதவி, ஆள்கடத்தல் என பல வேலைகளை செய்தும், ஒன்றும் பலனளிக்காமல் தோற்ற போகிறார் வெண்பா. இத்துடன் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஹேமா, அப்பாவிடமும், லட்சுமி, அம்மாவிடமும் வளர்கிறார்கள். இவர்களுக்கு இடையே ஏற்படும் பந்தம் என சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது சீரியல்.

கர்ப்பத்தை அறிவித்த ஃபரீனா

கர்ப்பத்தை அறிவித்த ஃபரீனா

இந்நிலையில் சமீபத்தில் நிஜ வாழ்க்கையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா. இதனால் இனி அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க மாட்டார். அவருக்கு பதில் யார் வெண்பா கேரக்டரில் நடிப்பார். அல்லது வெண்பா கேரக்டர் நீக்கப்பட்டு, கதை வேறு விதமாக மாற்றப்படுமா என பல விதமான வதந்திகளும், கேள்விகளும் எழுந்தது.

வதந்திகளை முடித்த வெண்பா

வதந்திகளை முடித்த வெண்பா

ஆனால் அது எதுவும் உண்மையில்லை. பாரதி கண்ணம்மா கேரக்டரில் தான் தொடர்ந்து நடிக்க போவதாகவும், பிரசவத்திற்கு 2 மாதங்களுக்கு முன் தான் பிரேக் எடுத்துக் கொள்ள போவதாகவும் ஃபரீனா அறிவித்தார். மேலும் பாரதி கண்ணாம்மா சீரியலில் வெண்பா கேரக்டர் தொடரும், அதில் நானே தொடருவேன் என்றும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஃபரீனா.

இப்படி பேசுறாங்களே

இப்படி பேசுறாங்களே

இதைத் தொடர்ந்து பெரிய வயிறுடன் இருக்கும் ரீல் வீடியோக்கள், ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் ஃபரீனா. இதில் சமீபத்தில் வயிற்றில் மெகந்தி போட்டது போன்று ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டார். அதற்கு சிலர் மோசமாக கமெண்ட் செய்தனர். இதனால் வருத்தத்துடன் அந்த கமெண்ட்டை சுட்டிக் காட்டி வீடியோ பதிவிட்டார் ஃபரீனா.

தண்ணீருக்கு அடியில் ஃபோட்டோஷுட்

தண்ணீருக்கு அடியில் ஃபோட்டோஷுட்

இந்நிலையில் லேட்டஸ்ட்டாக, நீச்சல் குளத்தில், தண்ணீருக்கு அடியில், சிவப்பு நிற உடையில், பெரிய வயிற்றை காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் ஃபரீனா. அத்துடன், கர்ப்பம் என்பது நோயல்ல. வாழ்க்கையின் ஒரு அங்கம். அதனால் பெண்மணிகளே பயமின்றி, பாதுகாப்பாக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். ஃபரீனாவின் இந்த ஃபோட்டோ மற்றும் வீடியோவிற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.

வைரலாகும் ஃபரீனாவின் பதிவுகள்

வைரலாகும் ஃபரீனாவின் பதிவுகள்

தண்ணீருக்கு அடியில் இப்படி ஒர்க்அவுட் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. சுலபம் தான். இது சுகபிரசவம் நடக்க, கர்ப்பகாலத்தில் செய்யப்படும் பயிற்சி தான் என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் அதிகமானவர்கள் ஃபரீனாவை பாராட்டியும், ரெட் ஹார்ட் எமோஜிக்களாலும் கமெண்ட் செய்துள்ளனர்.

ஏற்கனவே ஷமீரா ரெட்டி செய்தாரே

ஏற்கனவே ஷமீரா ரெட்டி செய்தாரே

கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீருக்கு அடியில் நடிகைகள் ஃபோட்டோஷுட் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் ஷமீரா ரெட்டி இதே போன்று ஒரு ஃபோட்டோஷுட்டை நடத்தினார். அதுவும் பிகினியில். இந்த ஃபோட்டோ அந்த சமயத்தில் விமர்சனங்களை பெற்றாலும், பாராட்டுக்களையும் பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X