Bigg Boss Tamil 7: பாதியில் நின்ற பாரதி கண்ணம்மா சீரியல்.. அந்த நடிகையும் பிக் பாஸ்க்கு வராங்களாம்?

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன் பங்கேற்ற நிலையில், தற்போது சூரி, சசிகுமார் நடித்து வரும் படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

இந்நிலையில், ரோஷினி ஹரிப்ரியனுக்கு பதில் கண்ணம்மாவாக நடித்த நடிகை தான் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Barathi Kannamma serial actress Vinusha Devi will expect as a Bigg Boss Tamil 7 contestant

இந்த சீசனில் மொத்தம் 20 பேர் போட்டியாளராக பங்கேற்கப் போவதாகவும் 10 பேர் ஒரு வீட்டிலும் இன்னொரு 10 பேர் இன்னொரு வீட்டிலும் இருப்பார்கள் என்கின்றனர்.

இரண்டு வீடு எப்படி இருக்கும்?: இந்தி பிக் பாஸ் சீசன் 7லேயே இந்த இரண்டு வீடு கான்செப்ட் வந்து விட்ட நிலையில், அங்கே சுட்ட தோசையை அப்படியே இங்கே புதுசா சுடுவது போல தமிழ் பிக் பாஸ் டீம் இரண்டு வீடு கான்செப்ட்டை கொண்டு வந்திருப்பதாக ட்ரோல்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

ஒவ்வொரு பிக் பாஸ் வீட்டிலும் தலா 10 பேர் செல்வார்கள் என்றும் முதல் 20 நாளைக்கு அவர்கள் தனித்தனியாகவே சந்திக்காமல் இருப்பார்கள் என்றும் அதன் பின்னர், ஒரே வீடாக மாற்றப்படும் என்றெல்லாம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை: பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷினி ஹரிப்ரியன் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்த நிலையில், அவர் பிசியாகி விட்ட நிலையில், இரண்டாவதாக கண்ணம்மாவாக நடித்த வினுஷா தேவியை இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாரதி கண்ணம்மா சீசன் 2 ஆரம்பித்த வேகத்திலேயே செம மொக்கை என ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், அதிரடியாக நிறுத்தப்பட்ட நிலையில், வினுஷாவுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தர அவரை பிக் பாஸ் போட்டியாளராக தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலக்குவாரா கண்ணம்மா?: பாரதி கண்ணம்மா சீரியலில் கடைசியில் வந்தாலும் கிளைமேக்ஸில் கலக்கி இருந்த நடிகை வினுஷா பிக் பாஸ் வீட்டிலும் கலக்குவாரா? என்பதை வெயிட் பண்ணித் தான் பார்க்க வேண்டும். ஆனால், பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் பலர் வினுஷாவுக்கு ஓட்டுப் போடுவார்கள் என தெரிகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை வினுஷா பிக் பாஸ் வீட்டுக்குள் எப்படி நுழையப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X