பாசத்தால் அனைவரையும் கட்டிப் போட்ட இயக்குனர் சேரன்... பாரதிராஜா கண் கலங்கிய தருணம்
சென்னை : இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது ஆனந்தம் விளையாடும் வீடு
குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதிலுள்ள புரிதல்களை பற்றியும் மிக அழுத்தமாக கூறியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது
குடும்ப படங்களுக்கு பெயர் போன இயக்குனர் சேரன் இந்த படத்தில் லீட் ரோலில் நடித்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய சேரனை ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் பார்த்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

குடும்ப உறவுகளை பற்றி
தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. ஆனாலும் குடும்ப உறவுகளை பற்றி கூறும் கூட்டுக் குடும்ப படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பெரும் ஆதரவு இருந்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ளது ஆனந்தம் விளையாடும் வீடு. சேரன், கௌதம் கார்த்திக் இந்த படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளனர். மேலும் சரவணன், வெண்பா,ஷிவாத்மிகா ராஜசேகர், சிங்கம்புலி,டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்

பாரதிராஜா பாராட்டு
சேரன் என் பிள்ளை என்பதற்காக நான் சொல்லவில்லை இந்தப் படத்தில் சேரன் ஒட்டு மொத்த கதையையும் புரிந்துகொண்டு அனைவரது உணர்வுகளையும் தாங்கிப்பிடித்து தனிமனிதனாக சுமந்துகொண்டு, கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறான் அவன். என்னைப் போலவே எமோஷனல் மேன் .பல இடங்களில் கண் கலங்க வைத்தான், மன அழுத்தத்தை ஏற்படுத்தி விட்டான் சேரன் மை சன் .லாங் லிவ் சேரன், ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் பியுட்செர் என்று உணர்ச்சி பொங்க பாராட்டி உள்ளார் இயக்குனர் இமயம் பாரதி ராஜா.

ஆனந்தம் விளையாடும் வீடு
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதுக்கு இதமான ஒரு குடும்பப் படத்தை பார்க்கிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த திரைப்படம் கூட்டுக் குடும்பத்தின் முக்கியதுவத்தை பற்றி ஆணித்தனமாக கூறியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் சேரன் முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்.

குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்
இயக்குனர், நடிகர் என தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் சேரன் திரைப்படங்களுக்கு என்றே இன்று வரை தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் என்றாலும் சரி நடிப்பில் வெளியாகும் படங்கள் என்றாலும் சரி குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் அனைவரும் சென்று பார்க்கும் வகையில் குடும்ப படங்களாக இருக்கும். அதேபோல இப்போது வெளியாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்திலும் சேரனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.
Recommended Video

சேரன் தோளில் சுமந்துள்ளார்
கூட்டுக் குடும்பத்தில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறதோ அதே அளவிற்கு சகிப்புத்தன்மையும், விட்டுக்கொடுத்து செல்லும் குணமும் வேண்டும் அதுதான் கூட்டுக் குடும்பத்திற்கு அழகு என்பதை மிகவும் உணர்வுபூர்வமாக இப்படம் கூறியுள்ளது. மேலும் இதில் முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சேரனை பார்க்கும் பொழுது ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களது வீட்டில் உள்ள மூத்த அண்ணனைப் போல உணர முடிகிறது. அந்த அளவிற்கு முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தை தன்னுடைய தோளில் சுமந்து படம் முழுவதும் நம்மை உணர வைத்திருக்கிறார். சேரன் இயக்கத்தில் பாண்டவர் பூமி படத்தில் ராஜ்கிரண் கதாபாத்திரத்தை நம் அனைவராலும் மறக்க முடியாது. அது போலவே ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் சேரன் கதாபாத்திரம் இனி பலராலும் மறக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை .


Click it and Unblock the Notifications











