Barbie Box Office: ஒரு பில்லியன் டாலர் வசூல்.. ஹாலிவுட்டில் பெண் இயக்குநர் செய்த இமாலய சாதனை!
ஏஞ்சல்ஸ்: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ஓபன்ஹெய்மர் படத்துக்கு போட்டியாக அதை விட பல நூறு கோடி பட்ஜெட் அதிகமாக செலவு செய்து உருவாக்கப்பட்ட படம் தான் பார்பி.
குழந்தைகளுக்கு பிடித்தமான பார்பி பொம்மைகளின் உலகையே சினிமாவாக்க வேண்டும் என நினைத்து இயக்குநர் கிரெட்டா கெர்விக் இயக்கிய இந்த படம் வெறும் 17 நாட்களில் ஒரு பில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது.

ஹாலிவுட்டில் பெண் இயக்குநர்கள் பலரும் சாதிக்காத பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையை கிரெட்டா கெர்விக்கின் பார்பி படம் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது.
8000 கோடி வசூல்: ஆயிரம் கோடிக்கு மேல் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான பார்பி படத்தில் ஹீரோயினாக பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி பார்பியாக நடித்துள்ளார். மேலும், டெட்பூல் படத்தின் ஹீரோ ரியான் கோஸ்லிங்கும் இந்த படத்தில் நடித்துள்ளார். உலகளவில் பிரம்மாண்ட ப்ரமோஷன் நடத்தி வெளியான இந்த படம் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் படத்துடன் போட்டிப் போட்ட நிலையிலும், மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி சாதனை படைத்துள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களின் இந்திய மதிப்பு 8000 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் இயக்குநர் சாதனை: பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிரெட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கட் ராபி இயக்கிய பார்பி திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கிய பெண் இயக்குநர் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனையை நடத்தி உள்ளார். இதற்கு முன்னதாக வொண்டர் உமன் படத்தை இயக்கிய பெட்டி ஜென்கின்ஸ் வொண்டர் உமன் படத்தை ஒரு பில்லியன் டாலர் வசூல் கடந்த படமாக மாற்றியிருந்தார். இந்நிலையில், தற்போது கிரெட்டா கெர்விக்கும் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளார்.

ஓபன்ஹெய்மரை ஓவர்டேக்: பார்பி படத்தை கம்பேர் செய்தால் ஓபன்ஹெய்மர் படத்தின் பட்ஜெட்டும் குறைவு. மேலும், அதன் வசூலும் மிகக்குறைவு தான். இதுவரை 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை உலகளவில் ஓபன்ஹெய்மர் படம் வசூல் ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் பட்ஜெட்டுக்கு அதிக வசூல் என்றாலும் பார்பி படத்துடனான போட்டியில் ஓபன்ஹெய்மர் பின் தங்கியே இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications