உண்மை கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள மேதகு 2… ட்ரெயிலர் வெளியீடு

சென்னை : மேதகு படத்தை தொடர்ந்து தற்போது மேதகு 2 படம் உருவாகியுள்ளது

விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்ரெயிலரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேதகு படம்

மேதகு படம்

டி கிட்டு இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியான படம் மேதகு. விடுதலை புலி இயக்கத்தின் தலைவரான வேலுபிரபாகரனின் வாழ்ககையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவானது. ரியாஸ் என்பவர் படத்தை தயாரித்ததுடன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கிரவுட் பண்டிங்

கிரவுட் பண்டிங்

இந்தப் படம் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டது படத்திற்கு பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். பிரபாகரனின் பிறப்பு மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு உருவான வரலாறு இதில் கதைக்களமாக எடுக்கப்பட்டுள்ளது. பிரபாகரனின் ஆரம்ப கட்ட வாழ்க்கை இதில் படமாக்கப்பட்டுள்ளது.

வேலு பிரபாகரன் வாழ்க்கை வரலாறு

வேலு பிரபாகரன் வாழ்க்கை வரலாறு

தெருக்கூத்து வழியாக பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் உள்ளிட்டவை இந்தப் படத்தில் காணப்படுகிறது. ஆயினும் சில சினிமாத்தனங்களும் படத்தில் காணப்படுகின்றன. அறிமுக இயக்குநர் கிட்டு இந்த மிகப்பெரிய களத்தை எடுத்து அதை சிறப்பாகவும் செய்து பாராட்டுக்களை அள்ளுகிறார்.

கிட்டு இயக்கம்

கிட்டு இயக்கம்

வரலாற்று தகவல்கள் நிறைந்த இந்தப் படத்தை சிறப்பாக தர முயற்சி அதில் வெற்றியும் பெற்றிருந்தார் கிட்டு. கேரக்டர் தேர்விலும் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக பிரபாகரனாக நடித்திருக்கும் அந்த சிறுவன் சிறப்பான தேர்வு. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அது பல இடங்களில் தெரிகிறது.

இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டு வாழ்த்துக்ளை பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இரா கோ யோகேந்திரன். இந்தப் படத்திற்கும் பிரவீன் குமாரே இசையமைத்துள்ளார். அவரது இசையில் மிரட்டலான ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

சுதந்திரம் குறித்த மெசேஜ்

சுதந்திரம் குறித்த மெசேஜ்

சுதந்திரம் என்பது இறைஞ்சி கேட்பதல்ல போராடி பெறுவதே என்ற மெசேஜுடன் இந்த ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. முதல் படம் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X