twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவாகிறது பசும்பொன் தேவரின் வாழ்க்கை.. 'ஊமை விழிகள்' அரவிந்தராஜ் இயக்குகிறார்!

    By
    |

    சென்னை: பசும்பொன் தேவரின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதை 'ஊமை விழிகள்' புகழ் அரவிந்தராஜ் இயக்குகிறார்.

    Recommended Video

    Thalaivi Official MGR First Look | Thalaivi Teaser | Kangana | Arvind Swami

    சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதைகளை சினிமாவாக எடுப்பது இப்போது டிரெண்டாகி வருகிறது.

    Basheer starrer Pasumpon Muthuramalinga Thevar biopic titled ‘Thesiya thalaivar’

    அது போன்ற பயோபிக் கதைகள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுவதால் அதை எடுக்க சினிமா துறையினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. ஜெ.எம்.பஷீர் தேவராக நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர், 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'செந்தூரபூவே' உட்பட பல வெற்றி படங்களை இயக்கியவர்.

    தேவர் சமூகத்தை சேர்ந்த சௌத்ரி தங்கள் தேவரை போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராக படத்தில் நடிக்க கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டார். தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர் வருடா வருடம் பசும்பொன் சென்று தேவரை வணங்க கூடியவர்.

    அழகு சின்னமாம்ல.. பிரபல பிகினி டிரெஸ் நடிகையை, பிரியமாக வர்ணிக்கும் பாசக்கார புள்ளிங்கோஸ் !அழகு சின்னமாம்ல.. பிரபல பிகினி டிரெஸ் நடிகையை, பிரியமாக வர்ணிக்கும் பாசக்கார புள்ளிங்கோஸ் !

    தேவரின் சிஷ்யரான ஏ.ஆர்.பெருமாள் தேவர் எழுதிய 'முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்' என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது. முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் அதில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    Read more about: biopic பயோபிக்
    English summary
    J.M.Basheer starrer Pasumpon Muthuramalinga Thevar biopic titled as a ‘Thesiya thalaivar’.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X