Ponman Blue Sattai Maran Review: பசில் ஜோசப்பின் அடுத்த படம்.. சும்மா கதறவிட்ட ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: மலையாள இயக்குநர் ஜோதிஷ் சங்கர் இயக்கத்தில் பசில் ஜோசப், லிஜோமோல் ஜோஸ் மற்றும் சஜின் கோபு நடித்துள்ள பொன்மான் (பொன்மேன்) திரைப்படம் வெளியாகி ரசிகர்களை தியேட்டர்களில் சிரிப்பலையில் ஆழ்த்தி வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் படும் கஷ்டத்தை சமீபத்தில் குடும்பஸ்தன் படமெடுத்து வெற்றி கண்டுள்ள நிலையில், மலையாளத்தில் இருந்து அப்படியொரு படமாக இந்த பொன்மான் வெளியாகி இருக்கிறது.

ஜி.வி. பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனியை ஓவர்டேக் செய்யும் விதமாக பசில் ஜோசப் படம் இயக்குவதை விட்டுவிட்டு தொடர்ந்து ஹீரோவாக டஜன் படங்களில் நடித்து அடுத்தடுத்து ரிலீஸ் செய்து வருகிறார். இதில், சின்ன வித்தியாசம் என்னவென்றால் அவரது படங்கள் எல்லாம் ரசிகர்களை சிரிக்க வைத்து ஹிட் அடித்து வருகின்றன.

பொதுமக்கள் பொன்மான் படத்தை பாராட்டி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தமிழ் சினிமா போல இந்த மலையாள படம் கமர்ஷியல் குப்பை என போட்டுத் தாக்கியுள்ளார். அவர் இந்த படத்தை எப்படியெல்லாம் கழுவி ஊற்றி இருக்கிறார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
பொன்மான் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: தங்கை லிஜோமோல் ஜோஸ் திருமணத்துக்காக நகையை கடன் வாங்கி நடத்துகிறார் கொல்லத்தை சேர்ந்த ப்ரூனோ. தங்க நகைகளை கடன் கொடுக்கும் வேலையில் இருக்கும் பசில் ஜோசப் திருமணம் முடிந்த கையோடு நகைகளை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நகையை அவரிடம் திருப்பி தராமல் இருக்க, தனது முதலாளியிடம் தான் மாட்டிக் கொள்வேனே என நினைத்து எப்படியாவது நகையை மீட்க போராடும் காமெடி கலந்த படம் தான் இந்த பொன்மான். இந்த படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் வழக்கமாக மலையாள படங்கள் எல்லாம் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்றும் இந்த படம் சுத்தமாக செயற்கைத்தனமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

எதுவுமே ஓட்டல: பசில் ஜோசப் சோகமான முகத்துடன் நடித்தாலும் அவரை பார்த்தாலே ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். பெண் வீட்டார் நகையை கடனாக வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் இருக்க, மாப்பிள்ளையிடம் அந்த நகைகளை கேட்க பசில் ஜோசப் ஏன் படாதபாடு படுகிறார் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார். வரதட்சனை கொடுமையையும் தங்க நகையால் பலரது வாழ்க்கை எப்படி சின்னா பின்னம் ஆகிறது என்கிற மைய கருத்துடன் இருக்கும் இந்த படம் நல்லாத்தான் இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் வழக்கம் போல ப்ளூ சட்டை மாறனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











