twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உடல் நிலை சரியில்லாமல் இருந்த.. பிரபல திரைப்பட இயக்குனர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்!

    By
    |

    மும்பை: பிரபல மூத்த திரைப்பட இயக்குனர் இன்று காலமானதை அடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தி சினிமாவின் மூத்த இயக்குனர் பாசு சட்டர்ஜி (Basu Chatterjee). ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் பத்திரிகை ஒன்றில் கார்ட்டூனிஸ்டாக மும்பையில்
    வாழ்க்கையை தொடங்கியவர்.

    பின்னர் சினிமாவுக்கு வந்த அவர், பாசு பட்டாச்சார்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ராஜ்கபூர், வஹீதா ரகுமான் நடித்த தேரி கசம் உட்பட சில படங்களில் பணியாற்றிய அவர், பின்னர் சாரா ஆகாஷ் என்ற படம் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படம் 1969 ஆம் ஆண்டு வெளியானது.

    தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்!தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்!

    ராஜேஷ் கண்ணா

    ராஜேஷ் கண்ணா

    நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் ராகேஷ் பாண்டே, மது சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்தனர். பின்னர், பியார் கா கர், உஸ் பர், சோட்டி சி பாத், ஸ்வாமி, கட்டா மிட்டா, ரஜினிகாந்தா உட்பட பல இந்திப் படங்களை இயக்கினார். இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களான மிதுன் சக்கரவர்த்தி, ராஜேஷ் கண்ணா, ஜீதேந்திரா, தேவ் ஆனந்த், அமிதாப்பச்சன், ராஜேஷ் கண்ணா, ஹேமமாலினி, நீது சிங் உட்பட பலர்
    நடித்துள்ள படங்களை இயக்கியுள்ளார்.

    பெங்காலி படம்

    பெங்காலி படம்

    சில பெங்காலி படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு திரிசங்கு என்ற பெங்காலி படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பின் படங்கள் எடுக்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ள அவர், சில படங்களை தயாரித்தும் உள்ளார். தூர்தர்ஷனுக்காக சில சின்னத்திரை தொடர்களையும் இயக்கியுள்ளார்.

    காலமானார்

    காலமானார்

    துர்கா என்ற படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள அவர், பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். மும்பையில் வசித்து வந்த அவருக்கு முதுமை தொடர்பான உடல் நலப் பிரச்னை இருந்தது. இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 93. இதை இந்திய திரைப்படம் மற்றும் டிவி இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் அசோக் பண்டிட், ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்

    இதையடுத்து இந்தி சினிமா பிரபலங்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் அமிதாப்பச்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், மிகவும் மென்மையான மனிதர். அவரது படங்கள் மத்திய இந்தியாவின் வாழ்க்கையை பிரதிபலித்தன. மன்ஸில் என்ற படத்தில் அவர் இயக்கத்தில் நடித்தேன். அவர் மறைவு சோகமான இழப்பு' என்று கூறியுள்ளார்.

    English summary
    Filmmaker Basu Chatterjee passes away in Mumbai at 93
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X