ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்.. ஆனால்.. பாத்ரூமுக்கு பூட்டுப் போட்டுட்டீங்களே பிக்பாஸ்!

சென்னை: ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்.. ஆனால், என பாத்ரூமிற்கு போட்டுள்ள பெரிய பூட்டை பார்த்து கமல்ஹாசன் பேசியது நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அசத்தி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி கோலாகலமாக பிரம்மாண்ட துவக்க விழாவுடன் துவங்கி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று ஒவ்வொரு அறையாக அறிமுகப்படுத்தினார்.

ஆரம்பமானது பிக்பாஸ்

ஆரம்பமானது பிக்பாஸ்

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி திட்டமிட்டபடி தொடங்கி உள்ளது. செம ஸ்டைலாக நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆனார். ஒவ்வொரு அறையாக பிக்பாஸ் வீட்டை சுற்றிக் காட்டினார் கமல்ஹாசன்.

ஜல்லிக்கட்டு காளை

ஜல்லிக்கட்டு காளை

புத்தம் புது டிசைனில் ஏகப்பட்ட ரசனை மிகுந்த செட்டாக இந்த சீசன் பிக் பாஸ் ஹவுஸ் உருவாகி இருக்கிறது. ஜல்லிக்கட்டு காளை சிலை உள்ளிட்ட சில சிறப்பம்சங்கள் இருந்தன. சிறைக்கு இந்த முறை கம்பிகள் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக வேறு ஒரு பாதுகாப்பு அம்சம் உள்ளது.

இரண்டு பெரிய கட்டுப்பாடுகள்

இரண்டு பெரிய கட்டுப்பாடுகள்

ஆனால், அதற்குள் இருக்கும் சில கட்டுப்பாட்டுகள் தான் ரசிகர்களையும் கமல்ஹாசனையும் அப்செட் ஆக்கி உள்ளது. பாவம் போட்டியாளர்களின் நிலைமையை என்னவென்று சொல்வது என்று தான் தெரியவில்லை. பெட்ரூம் மற்றும் பாத்ரூமுக்கு பிக்பாஸ் போட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பார்ப்போம்.

பெட்ரூமில் பூட்டு

பெட்ரூமில் பூட்டு

முதலாவதாக பெட்ரூமில் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்ல முடியாதபடி பூட்டி உள்ளது. ஆண்கள் பெட்ரூம் மற்றும் பெண்கள் பெட்ரூமுக்கு செல்லக் கூடாது என்கிற நிலையில், இதனை செய்துள்ளார்களா? ஏதாவது டாஸ்க்கில் வெற்றிப் பெற்ற பிறகே அதனை திறப்பதற்கான சாவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆத்திரத்தை அடக்கினாலும்

ஆத்திரத்தை அடக்கினாலும்

அடுத்து ரொம்ப முக்கியமான பிரச்சனை. ஆத்திரத்தை அடக்கி விடலாம் ஆனால், என பாத்ரூமிற்கு போடப்பட்டுள்ள பெரிய பூட்டை பார்த்து ஷாக்கான கமல் பேசியது குறித்து பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. பாத்ரூமை எப்படி திறப்பது அதுக்கு என்னப்பா போட்டி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X