10 கோடி கொடுத்தாலும் வீட்டில் இருக்க முடியாது...பிக்பாஸ் 7லிருந்து தாமாக வெளியேறும் பவா செல்லதுரை..?

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7 வீட்டிலிருந்து வெளியேற விரும்புவதாக யுகேந்திரன் மற்றும் சுசித்திராவிடம் பவா செல்லதுரை கூறியதால் விரைவில் வெளியேறிவிடுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கி நடந்துவருகிறது. இதற்கு முன்னர் நடந்த ஆறு சீசன்கள் போலவே இந்த சீசனும் களைகட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகத்தான் இந்த சீசனும் நடந்துகொண்டிருக்கிறது. கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் பெரும்பாலானோர் பிரபலமானவர்கள் இல்லை என்றாலும் கடுமையாக போட்டிப்போட்டு கண்டெண்ட் கொடுக்கின்றனர்.

Bava Chelldurai wants to quit Bigg Boss 7 on his own Decision

பிரதீப்: அந்தவகையில் முதல் கண்டெண்ட்டாக இருப்பவர் பிரதீப் ஆண்டனி. வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலிருந்து முழுக்க முழுக்க அவரது மைண்டுக்குள் இந்த கேமில் வெல்ல வேண்டும் என்றுதான் இருக்கிறது. இதன் காரணமாக சகட்டுமேனிக்கு அனைவரையும் போட்டு தாக்குகிறார். அதனால் ஹவுஸ் மேட்ஸுடன் அவருக்கு உரசல்கள் அதிகம் உருவாகியுள்ளன. அதேபோல் வனிதா மகள் ஜோவிகா, விசித்திரா உள்ளிட்டோரும் தங்களுக்கு தோன்றுவதை பேசி பஞ்சாயத்துக்குரியவர்களாக மாறியிருக்கிறார்கள்.

பவா செல்லதுரை: இந்த சீசனின் போட்டியாளர்களில் பலரையும் ஆச்சரியப்படுத்திய போட்டியாளர் என்றால் அவர் எழுத்தாளரும், கதை சொல்லியுமான பவா செல்லதுரைதான். இலக்கிய உலகில் ரொம்பவே பரிச்சயமான பவா இந்த வீட்டுக்குள் தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வியே அதிகம் எழுந்தது. இருந்தாலும் அவர் உள்ளே சென்றது சரிதான் என ஒருசிலர் கூறினர். அதேபோல் இவ்வளவு வயதாகிவிட்டது டாஸ்க்கெல்லாம் செய்ய முடியுமா என்றும் பலர் கேள்வி எழுப்பினர். அதனைத்தான் வீட்டில் இருந்தவர்களும் தங்களுக்குள் பேசினர். மேலும் அவரை முதல் வார எவிக்‌ஷனுக்கு நாமினேஷனும் செய்தனர்.

அனன்யா: ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அனன்யா ராவ் நேற்று எவிக்‌ஷன் ஆனார். பவா செல்லதுரை எவிக்‌ஷன் ஆகாததற்கு அவர் வீட்டுக்குள் இருந்தால் இன்னும் கதைகளை கேட்கலாம் என ரசிகர்கள் முடிவு செய்திருக்கலாம் என்பது காரணமாக இருக்கலாம் என்கின்றனர் பவாவின் ரசிகர்கள். இருந்தாலும் பவா செல்லதுரையின் வயது அந்த வீட்டுக்குள் இருப்பதற்கு அவரை அனுமதிக்குமா என்பது பலருக்கும் புரியாமல் இருந்தது.

அடுத்த பிரச்னை: இந்நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த பவா செல்லதுரை பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார். கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க இன்று காலை சீக்கிரமே பவா செல்லதுரை, யுகேந்திரன், சுசித்ரா ஆகியோர் எழுந்துவிட்டனர். ஆனால் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எழுந்திருக்கவில்லை. ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள்தான் சமைக்க வேண்டும் என்பதால் காஃபியோ, டீயோ குடிக்காமல் மூன்று பேரும் காத்திருந்தனர்.

வீட்டுக்கு போய் ஆகணும்: இதற்கிடையே பவா செல்லதுரை தான் வீட்டுக்கு போக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். யுகேந்திரன் மற்றும் சுசித்திராவிடம் லிவிங் ஏரியாவில் பேசிய அவர், " 8.30 மணி ஆகிடுச்சு இன்னும் அடுப்பே பற்ற வைக்கல. பெருமைக்காக சொல்லவில்லை என் வீட்டிலும், நிலத்திலும் நாலு செர்வண்ட் இருக்காங்க. எனது மனைவி அப்படி பார்த்துப்பாங்க.. வீட்டில் ஒரு காஃபி அப்புறம் ஒரு டீ குடிப்பேன். என் வீட்டில் ஏழு நாட்களும் அசைவ சாப்பாடுதான் இருக்கும். இங்க சாப்பாடு மோசம் எல்லாம் இல்லை. ஆனால் நேரத்துக்கு கிடைக்கவே மாட்டுது. வாழ்க்கையில் நான் காஃபி குடிக்காம இருந்ததே இல்லை.

நைட்லேர்ந்து மைண்ட்செட் மாறிடுச்சு. வீட்டுக்கு போகணும்னு தோனுது. பத்து கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் இங்கு இருக்கமாட்டேன். படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கு. இந்த வயது குருப்போட குறிக்கோள் வேறு. எனக்கு ஒரு குறிக்கோளும் இல்லை" என்றார். பின்பு கேமராவிடம் சென்ற அவர், "பிக்பாஸ் எனக்கு லோ சுகர் ஆகிறது. எவ்வளவு முறை சொல்வது என்னை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்.

எனக்கு எனர்ஜி குறைந்துவருகிறது. சூட்கேஸ் எல்லாம் எடுத்து வைத்துவிட்டேன். சீக்கிரம் என்னை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து பேசி அனுப்பி வையுங்கள்" என்றார். இதன் காரணமாக கடந்த சீசனில் ஜிபி முத்து போல் இவரும் தானாகவே வெளியேறிவிடுவாரா இல்லை அவரை பிக்பாஸ் சமாதானப்படுத்தி வீட்டில் இருக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X