வடிவேலு கூட இப்படி செஞ்சிருப்பாரான்னு தெரியல.. கிங்காங் பண்ண வேலை.. நெகிழ்ந்து பேசிய பவா லட்சுமணன்!

சென்னை: நடிகர் கிங்காங் தான் பல சினிமா கலைஞர்களுக்கு வேலை கொடுத்து வருகிறார் என பவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இரண்டடியாக இருந்தாலும் திருக்குறள் உலகப் பொதுமறையாக இருப்பது போல உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் கிங்காங் பல நலிவடைந்த சினிமா கலைஞர்களுக்கு ஆதரவாக உள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

சினிமா கலைஞர்களுக்கு வடிவேலு பெரிதாக உதவி செய்யவில்லை என பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், சமீபத்தில், உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த வெங்கல் ராவுக்கு வடிவேலு நிதியுதவி வழங்கியிருந்தார்.

Bava Lakshmanan Vadivelu

மறைந்த போண்டா மணி உள்ளிட்ட சிலர் வடிவேலு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை என வருத்தப்பட்டனர். இந்நிலையில், பவா லட்சுமணன் கிங்காங் செய்த உதவிகள் குறித்து கூறியுள்ளார்.

உள்ளத்தில் நல்ல உள்ளம்: 1988 ஆம் ஆண்டு வெளியான பாண்டியராஜனின் ஊரத் தெரிஞ்சுகிட்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் காமெடி நடிகர் கிங் காங். அன்பு கட்டளை, நெத்தியடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அதிசய பிறவி, போக்கிரி மற்றும் சுறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் கிங் காங்.

சூப்பர் ஸ்டாருக்கு குரு: அதிசயப் பிறவி திரைப்படத்தில் கிங்காங் நடனமாடிய காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிங் கங்கை குரு என்றும் ரஜினியை சிஷ்யா என்றும் அவர் கூப்பிடக் காரணமே ரஜினி தான் என்றும் கூறினார். இயக்குநர் எஸ்பி முத்துராமன் ரஜினிகாந்த் முதலில் இந்த ஐடியாவை சொன்னபோது ஒர்க்அவுட் ஆகுமா என யோசித்தார். ஆனால் இது கரெக்டா இருக்கும் என ரஜினிகாந்த் சொல்லி அந்த காமெடி காட்சியை உருவாக்கினார் என கிங் காங் அந்த பேட்டியில் கூறியிருந்தார். பல படங்களில் நடித்து அசத்திய கிங்காங் இன்று பலருக்கும் உதவி செய்து வருகிறார்.

10 பேருக்கு வேலை கொடுக்கிறார்: பவா லட்சுமணன் பல படங்களில் நடித்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், இன்னமும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். என்னை போல 10 பேருக்கு கிங்காங் தான் தற்போது வேலை கொடுத்து வருகிறார் என பவா லட்சுமணன் உருக்கமாக கூறியுள்ளார். கோவில் திருவிழாக்கள், காது குத்து மற்றும் சிறு சிறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதன் மூலம் எங்கள் பசியாற்றி வருகிறார் கிங்காங் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X