மற்றவர்கள் மாதிரி வடிவேலு இல்லை.. வளரவிடுவாரு.. காமெடி நடிகர் ஓபன் டாக்

சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் நடித்த அவர்; இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

Vadivelu Kollywood

ஆரோக்கியமான வளர்ச்சி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.

வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி: இதனையடுத்து பிரச்னைகள் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்தார் வடிவேலு. அவர் மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் அவ்வப்போது வந்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்தன. அதாவது அவருடன் நடித்த பலரும் வடிவேலு தங்களை வளர விடவில்லை என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். முக்கியமாக தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய ராஜ்கிரணையே வடிவேலு மதிப்பதில்லை என்று பலமான குற்றச்சாட்டு எழுந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் வடிவேலுவின் இன்னொரு முகமா என்று அதிர்ச்சியுடன் கேட்க ஆரம்பித்தனர். இருந்தாலும் மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வடிவேலு பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளவில்லை.

பாவா லட்சுமணன் பேட்டி: இந்நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , "மாயி படத்தில் வடிவேலு ஓகே சொன்னதால்தான் அதில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பிரபலம் அடைந்தேன். வடிவேலுவை பொறுத்தவரை அவருடன் நடிப்பவர்கள் வசனம் பேச வேண்டும் என்று நினைப்பார். அவருக்கு இந்த வசனத்தை கொடுங்கள், இவருக்கு இந்த வசனத்தை கொடுங்கள் என்று சொல்வார். மற்றவர்கள் அப்படி சொல்லமாட்டார்கள். சுமதி, பிரியங்கா ஆகியோர் எல்லாம் வடிவேலுவால்தான் வளர்ந்தார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X