கடைசியில் தாமரையிடம் அதைச் சொன்ன பாவனி
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் தாமரைச்செல்வி நேற்று வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இறுதியாக இருந்த 6 பேரும் ஒருவருக்கொருவர் நட்பாக பேசியதை கடந்த சில நாட்களாக பார்க்க முடிந்தது. நேற்று கமல்ஹாசன் வைத்த ஒரு ஒரு டாஸ்க்கில் கடைசியில் பாவனி தனது நிலையை தாமரைச் செல்வியிடம் தெளிவுப்படுத்திய நிகழ்வு நடந்தது.

தாமரை வெளியேற்றம்
பிக்பாஸ் சீசன் 5 இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சொல்வதுபோல் போட்டியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்து வருகின்றன. போட்டியில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார், இறுதிவாரம் வரை வருவார் எனவும், விட்டால் டைட்டிலையே வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்ப்பார்க்கப்பட்ட தாமரை நேற்று யாரும் எதிர்பாராவண்ணம் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தாமரையைப் பார்த்து பயந்தார்களா போட்டியாளர்கள்
இது தாமரையின் ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல, பிக்பாஸை தொடர்ச்சியாக பார்க்கும் அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. தாமரை டிக்கெட் டு ஃபினாலேக்கு செல்லக்கூடாது என்பதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் உறுதியாக இருந்ததை நிரூப் தேர்வின்போது பார்த்தோம். அதேபோல் தாமரைக்கும் பாவனிக்கும் சில நூறு வாக்குகளே வித்தியாசம் இருந்தது. பாவனி குறைவாக இருந்த நிலையில் அவர் முன்னேறி தாமரை வெளியேறிய மாயம் எல்லாம் பிக்பாஸில்தான் பார்க்கமுடியும்.

அதிர்ச்சியான பிக்பாஸ் ரசிகர்கள்
கிட்டத்தட்ட ஒரு சீசனில் தர்ஷன் வெளியேற்றப்பட்டதைப்போன்றுத்தான் அனைவரும் இதைப்பார்க்கின்றனர். நேற்றைய நிகழ்வில் கமல்ஹாசன் சில கேள்விகளை போட்டியாளருக்கு வைத்தார். நீங்கள் சாரி சொல்வதாக இருந்தால் யாருக்கு சொல்வீர்கள், நன்றி சொல்வதாக இருந்தால் யாருக்கு சொல்வீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு தோன்றியதை சொன்னார்கள்.

கடைசியில் தாமரையிடம் அதைச் சொன்ன பாவனி
பாவனியின் முறை வந்தபோது தான் வெகுநாட்களாக மனதில் போட்டு உறுத்திய விஷயத்துக்காக மன்னிப்பு கேட்க விரும்புவதாக சொன்னார். காயின் எடுத்த விவகாரத்தில் தாமரையின் மனம் புண்படும்படி தான் நடந்துக்கொண்டதற்கு தாமரையிடம் மன்னிப்பு கோருவதாக அவர் கூறினார். மிக அநாகரிகமாக தாமரையிடம் காயினை கைப்பற்றி அதை நியாயப்படுத்திவந்த பாவனிமீது இந்நிகழ்வு கரும்புள்ளியாகவே இருந்தது.

தாமரையின் ஆதரவாளர்கள் நெஞ்சில் இடம்பிடித்த பாவனி
தற்போது தான் மன்னிப்பு கோரியதன் மூலம் பாவனி தனது நிலையை தெளிவுப்படுத்தி தாமரையின் ஆதரவாளர்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்துவிட்டார். தாமரையின் நிலைதான் சரி என்பதும் தாமரை வெளியேறும் கடைசி நாளில் நடந்துள்ளது. பிக்பாஸை பார்த்து விமர்சித்துவரும் ஜேம்ஸ்வசந்தன் போன்றோர்கூட கடந்தவாரம் இதுகுறித்து பதிவிட்டு பாவனி போவதற்கு முன் மன்னிப்பு கோரி தனது நற்பெயரை காப்பாற்றிக்கொள்வாரா எனக் கேட்டிருந்தனர்.
Recommended Video

இருவரில் ஒருவர் வெளியேறும் நேரம் பாவனி எடுத்த முடிவு
நேற்று தாமரையிடம் தான் காயினை எடுத்த விவகாரத்தில் நடந்துக்கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரியதன்மூலம் பாவனி உயர்ந்து நிற்கிறார். தாமரையும் புன்சிரிப்புடன் அதை அங்கிகரித்தார். தாமரை வெளியேறும் நாள் அன்று ஒன்று தான் வெளியேறுவோம் அல்லது தாமரை வெளியேறுவார் ஆகவே சொல்லிவிடுவோம் என பாவனி முடிவெடுத்து கடைசியில் சொல்லிவிட்டார் என்பது சிறப்பான ஒன்று.


Click it and Unblock the Notifications











