கார் கூட வாங்காத கிங்காங்.. மகள் கல்யாணத்துக்கு எடைக்கு எடை சீர்வரிசையா? பயில்வான் ரங்கநாதன் பளிச்!

சென்னை: நகைச்சுவை நடிகர் கிங் காங் மகள் திருமணம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் அதிகம் உலா வந்து கொண்டு உள்ளது. முதல் மகளுக்கு திருமணம், என்பதால் கிங்காங் மிகவும் அட்டகாசமாக திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார் என்று எல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் இணையவாசிகள் பலரும் கிங் காங் தனது மகளுக்கு எடைக்கு எடை சீர்வரிசை கொடுத்துள்ளார் என்று எல்லாம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விஷயம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நகைச்சுவை நடிகர் கிங் காங் மகள் கீர்த்தனா திருமணம் நேற்று அதாவது ஜூலை 10ஆம் தேதி பெசன்ட் நகர் ஆறுபடை வீடு முருகன் கோவிலில் நடைபெற்றது. அதேபோல் மாலையில் ரிஷப்ஷன் நடைபெற்றது. திருமணம் காலையில் நடைபெற்றதால் பல பிரபலங்கள் திருமணத்திற்கு வரவில்லை. அதேப்போல், மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Bayilvan Ranganathan about actor king kong daughter marriage and Dowry
Photo Credit:

இந்நிலையில் நடிகர் கிங் காங் தனது மகளுக்கு எடைக்கு எடை சீர்வரிசை கொடுத்துள்ளார் என்றும், திருமணத்தின் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவினார் என்றும் இணையவாசிகள் மத்தியில் பேச்சுகள் அடிபட்டது. அப்படி இருக்கும்போது இந்த விஷயம் தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பயில்வான் ரங்கநாதன்: அவர் புதிய சிந்தனை என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், " எனக்கு கிங் காங்கை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தெரியும். அவரது பெயர் சங்கர் ஏழுமலை. வந்தவாசி அருகில் தான் அவரது சொந்த ஊர் உள்ளது. சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்த நடிகர்களில் இவரும் ஒருவர். இப்போது சினிமாவில் நடிப்பதில்லை என்பதால், கோவில் கச்சேரிகளுக்குச் சென்று தனது குடும்பத்தை பேணி வருகிறார்.

ஹெலிகாப்டர்: கீர்த்தனாவை திருமணம் செய்து கொண்டவர் பெயர் நவீன். இருவரும் பி.காம்., எம்.பி.ஏ படித்துள்ளார்கள். திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன். ஆனால் இணையவாசிகள் கிளப்பும் புரளியைப் போல ஹெலிகாப்டரில் இருந்து எல்லாம் மலர்கள் தூவ படவில்லை. கிங் காங் மிகக் குறைந்த வருமானம் கொண்ட நடிகர். அப்படி இருக்கும் போது, அவரால் ஹெலிகாப்டருக்கு வாடகை ரூபாய் 10 லட்சம் கொடுக்க முடியுமா?

Bayilvan Ranganathan about actor king kong daughter marriage and Dowry
Photo Credit:

சீர் வரிசை: அதேபோல் தனது மகளுக்கு எடைக்கு எடை சீர்வரிசை கொடுத்தார் என நீங்களாக எதையாவது சொல்லி அவர்களது குடும்பத்தை சிக்கலில் கொண்டுபோய் நிறுத்திவிடாதீர்கள். வருமான வரித்துறை சோதனைக்கு எல்லாம் அவர்களது குடும்பம் தாங்காது. கிங் காங் மகள் திருமணம் குறித்து தகவல்களைக் கூறுபவர்கள் உண்மையைக் கூறுங்கள். மிகைப்படுத்திக் கூறுகிறோம் என பொய்யைச் சொல்லாதீர்கள். திருமண செலவு மாப்பிள்ளை வீட்டார் பார்த்துக் கொண்டார்கள். ரிசப்ஷன் செலவு கிங் காங் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டனர். கிங் காங் தனக்கென தனி கார் கூட வாங்கிக் கொள்ளாதவர்" என்று தெரிவித்துள்ளார். காலையில் திருமணத்திற்கு சில நடிகர்களே வந்திருந்தார்கள். இது மட்டும் இல்லாமல் மாலையில் ரிசப்ஷனுக்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு திருமண விழாவில் கிங் காங் மனதை திருப்தி அடையச் செய்து விட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X