Seenu Ramasamy: சீனுராமசாமியின் விவாகரத்திற்கு காரணமே இது தான்.. மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதிர், நானும் எனது மனைவி தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் நிலையில் இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார்.

சீனு ராமசாமி: மதுரையில் பிறந்த சீனு ராமசாமி, கல்லூரி படிப்பை மதுரையிலேயே முடித்துவிட்டு, சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கினார். இவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தார். எழுத்தாளரான சீனு ராமசாமி பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். இவரின் புத்தகங்களில் மதுரையின் வரலாறுகள் இடம் பெற்றிருக்கும். அடிப்படையில் எழுத்தாளரான இவர், தனது எழுத்துக்களை கேமராவின் மூலமாக திரைப்படமாக வெளியிட்டு வருகிறார். இவர் கூடல் நகர் என்ற படத்தை முதன்முதலாக இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆனார்.

seenu ramasamy divorce bayilvan ranganathan

தரமான திரைப்படங்கள்: இதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்ற பட்டத்தை கொடுத்ததே சீனு ராமசாமி தான். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. அதன், பிறகு விஜய் சேதுபதியை வைத்து தர்மதுரை என்ற படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளியது. இவர் கோழிப்பண்ணையும் சின்ன துறையும் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

பாலியல் தொல்லை: நேற்று, சீனு ராமசாமி, தனது மனைவியை விவாகரத்து செய்வதாக, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீனு ராமசாமி பற்றி இதுவரைக்கும் எந்தவிதமான கிசு கிசுவும் வந்ததில்லை. ஆனால் கடந்த ஆண்டு, இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்த போது, சீனு ராமசாமி, பாலியல் ரீதியாக தொலை கொடுத்ததாக, மனிஷா யாதவ் என்ற நடிகை கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை பொத்தம் பொதுவாக கூறினாரே தவிர, இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிட்டது இல்லை.

இதுதான் காரணம்: விவாகரத்து நடக்கிறது என்றால் அதற்கு ஒரே ஒரு விஷயம் தான் முக்கிய காரணமாக இருக்கும். சினிமாக்காரர்களின் மனைவிக்கு சினிமாவை பற்றி எதுவும் தெரியவில்லை. அவர்களுக்கு பாடி டிமாண்ட் இருக்கும், தொழில்ரீதியான வலிகள் இருக்கும், அதை மனைவிகள் நீங்கள் புரிந்து கொள்வதில்லை. இயக்குநர்கள், நடிகர்கள் மனைவி மீது அன்பு செலுத்த நேரம் இல்லாமல் போகலாம், இதை மனைவிகள் புரிந்து கொண்டு தன்னுடைய கணவரின் வேலை அப்படி என்று புரிந்து கொண்டால் மட்டுமே சினிமாக்காரர்கள் நடிகராக இருந்தாலும், இயக்குனராக இருந்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால், சீனு ராமசாமி எப்போதும் அலுவலகத்திலேயே இருப்பது தான் விவாகரத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X