மேகா ஆகாஷின் வருங்கால கணவர் யார்? முக்கிய அரசியல் புள்ளியின் மகன்.. பயில்வான் சொன்ன தகவல்!

சென்னை: பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மேகா ஆகாஷ், தனது காதலருடன் நிச்சயம் நடந்ததாக போட்டோவை வெளியிட்டு இருந்தார். இதில், சாய் விஷ்ணு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான திருநாவுக்கரசரின் மகன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேகா ஆகாஷின் கணவர் யார்? : அதில், நடிகை மேகா ஆகாஷ் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த நடிகை திருமணம் செய்ய இருக்கும் வருங்கால கணவரின் பெயர் சாய் விஷ்ணு, நிச்சய போட்டோவை வெளியிட்டு இருந்த மேகா ஆகாஷ், வருங்கால கணவர் குறித்து எதையும் சொல்லவில்வை. அந்த சாய் விஷ்ணு, முன்னாள் தமிழக தொழில் அமைச்சர் மற்றும் மத்திய பாஜகவின் இணை அமைச்சர், காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வளவு பொறுப்புகளை வகித்தவர் தான் திருநாவுக்கரசர். அவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு சில நாட்களிலேயே மத்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

megha akash Sai vishnu thirunavukarasar Bayilvan Ranganathan

சாய் விஷ்ணு: வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர் தனது சொத்து வெளியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அக்கா, தங்கை என இரண்டு பேரையும் திருமணம் செய்து கொண்டார். திருநாவுக்கரசரின் இரண்டாவது மனைவியின் ஐந்தாவது மகன் தான் சாய் விஷ்ணு. இவருக்கு சினிமாவில் ஈடுபாடு இருந்ததால், அவரை அமெரிக்காவிற்கு அனுப்பி படிக்க வைத்தார் திருநாவுக்கரசர். இதைத்தொடர்ந்து சென்னை திரும்பிய சாய் விஷ்ணு, காலா படத்தில் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தார்.

6 ஆண்டுகள் காதல்: இந்த படத்திற்கு பிறகு இவர் எந்த இயக்குநருடனும் உதவி இயக்குநராக இல்லாமல், குறும்படத்தை இயக்கினார். அந்த படத்தில் மேகா ஆகாஷ் நடித்திருந்தார். அப்போது தான் இவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். சாய் விஷ்ணுவும் பெரிய இடத்து மகன் என்பதால், மேகா ஆகாஷூம் அனைத்திற்கும் ஒத்துக்கொண்டார். இப்படியே இந்த விவகாரம் ஆறு ஆண்டுகள் புகைத்துக்கொண்டு இருந்து தற்போது வேறு வழியில்லாமல் நிச்சயம் நடந்துள்ளது.

ஏன் ரகசியம்: இதைத்தொடர்ந்து, திருநாவுக்கரசர், ராகுல் காந்தி உட்பட அனைவருக்கும் கடந்த ஒரு வாரமாக பத்திரிக்கை கொடுத்து வருகிறார். இந்த விஷயத்தை திருநாவுக்கரசரே சொல்லி இருக்கலாமே, அதை ஏன் அவர் செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல் மேகா ஆகாஷ், நிச்சயம் செய்த போட்டோ எதையும் வெளியிட வில்லை. இருவரும் இருக்கும் போட்டோவை மட்டுமே வெளியிட்டுள்ளார். இதில் ஏன் இவ்வளவு ரகசியம் என்று தெரியவில்லை. இந்த ரகசியத்தை முறியடிக்கும் வகையில் தான் தற்போது திருநாவுக்கரசர் பத்திரிக்கைகளை கொடுத்து வருகிறார். இவர்களின் திருமணம் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநான் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X