ஜப்பானை திணறவைத்த நெப்போலியன்.. பெண்ணின் சொந்தம் யாருமே வரல.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: ஜப்பானில் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் நேற்று காலை காலை 8 மணி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு, மீனா, கார்த்தி, கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தடபுடலாக நடந்த இந்த திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகரான நெப்போலியன் சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டு விட்டு, தனது மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது அவரின் ஆசைப்படி மூத்த மகன் தனுஷுக்கு ஜப்பானில் திருமணம் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் திருமணத்தை நடத்தினால் எப்படி நடக்குமோ அது போல, பந்தக்கால் நடுவது,ஹல்தி என அனைத்தும் தடபுடலாக நேற்று திருமணம் நடந்தது.மணமகன் தனுஷால் தாலி கட்டமுடியாது என்பதால்,செயினில் தாலி கோர்க்கப்பட்டு இருந்தது. இதை தனுஷின் அம்மா எடுத்து கொடுக்க திருமணம் நடந்தது. திருமணத்தை பார்த்த நெப்போலியன் தேம்பி தேம்பி அழுதார். இவர்களின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

napoleon dhanush marriage bayilvan ranganathan

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், தனுஷுக்கு ஜப்பானை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாம். இதனால், இவர் முதலில் ஜப்பானை சுற்றிபார்க்கத்தான் முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கு இடையில் தனுஷுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டதால், தனது திருமணத்தை ஜப்பானில் நடத்த வேண்டும் என தனுஷ் ஆசைப்பட்டுள்ளார். அந்த ஆசையை நெப்போலியன் நிறைவேற்றி உள்ளார்.

தடபுடலான திருமணம்: மகனின் திருமணத்தை ஜப்பானே திக்குமுக்காடும் அளவிற்கு நடத்திவிட்டார். திருமணம் தமிழ்நாட்டில் நடந்து இருந்தால், எப்படி நடிகர்கள் வருவார்களோ அதே போல பல நடிகர் இரண்டு நாட்களுக்கு முன்பே ஜப்பான் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஸ்டார் ஓட்டலில் அறை எடுத்து தங்கவைத்துள்ளார்.அவர்களுக்கு இந்திய உணவில் எந்த குறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் நெப்போலியன்.

புரிந்து கொண்டனர்: நேற்று திருமண வீடியோவை பார்த்த பலர், பல கேள்விகளை கேட்கின்றனர். அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்கிறார்கள். ஆனால், தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணை தனுஷ் நிச்சயம் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார். அப்படி இல்லற வாழ்க்கைக்கு தகுதி இல்லாமல் இருந்து இருந்தால், அவருக்கு எப்படி திருமண ஆசை வந்து இருக்கும். அதுமட்டுமில்லாமல் அக்ஷயாவும் தனுஷூம் மனம்விட்டு பேசி இருக்கிறார்கள். இதனால் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

ஏழ்மையான குடும்பம்: மேலும் தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், மணப்பெண் அக்ஷயா, நெப்போலியனின் உறவுக்கார பெண்தான்,ஏழ்மையான குடும்பம் என்பதால் தான் இதுபோன்ற ஒரு தியாகத்தை அந்த பெண் செய்து இருக்கிறாள். திருமணத்தில் உறவினர்களால் ஏதாவது குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்கான பெண்ணின் சொந்தங்கள் யாரும் வரவில்லை. பெண்ணின் பெற்றோர் மட்டுமே வந்து இருக்கிறார்கள். உண்மையில் அந்த பெண்ணுக்கு பெரிய மனசு வேண்டும், நிச்சயம் நெப்போலியன் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு சொத்துபத்து கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்வார் என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X