திருமணம் வேண்டாம்னு சொன்ன சாய்பல்லவி? தங்கையின் கணவர் யார் தெரியுமா? பிரபலம் பகிர்ந்த தகவல்!

சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவரின் தங்கை பூஜாவிற்கு அண்மையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பூஜாவின் காதலன் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவரும் நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார்.

கோயம்பத்தூரை பூர்வீகமாக கொண்ட சாய் பல்லவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'உங்களில் யார் அடுத்த பிரபு தேவா' என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, மலையாளத்தில் வெளி வந்த பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய்பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை பலர் மலர் டீச்சர் என்று தான் அழைத்து வருகின்றனர்.

Bayilvan Ranganathan About Sai Pallavi Sister pooja Wedding

நடிகை சாய் பல்லவி: தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துவரும் சாய் பல்லவியின் தங்கைக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி கலக்கலாக ஆட்டம் போட்ட வீடியோ வெளியானது. அக்கா இருக்கும் போது தங்கைக்கு திருமணம் செய்து இணையத்தில் பேசுபொருளான நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சாய் பல்லவியின் தங்கை: அதில், நடிகை சாய்பல்லவிக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை, ஆனால், தங்கைக்கு திருமண ஆசை வந்ததால், அவர் திருமணத்திற்கு ஒகே சொல்லி இருக்கிறார். இது பாராட்ட வேண்டிய விஷயம் தான். சாய் பல்லவின் தங்கையும் இரண்டு மூன்று படங்களில் நடித்துள்ளார். சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான சித்திரை செவ்வானம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருந்தார். அதற்குப் பின் இவர் ஒரு சில படங்களில் நடித்தார். அவர் ஒருவரை காதலித்ததால், பையன் வீனீத் நல்ல பையன் என்பதால், பெற்றோர் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டனர். பூஜா அக்காவை போல சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொள்ள போகிறாள்.

திறமையான நடிகை: நடிகை சாய் பல்லவி இது வரை படுக்கை அறை காட்சி,முத்தக் காட்சி என எதிலும் கவர்ச்சியாக நடித்தது இல்லை. அதே போல, சாய் பல்லவி இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை. பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடிக்க அழைக்கிறார்கள். ஆனால், அதற்கு சாய் பல்லவி ஒத்துக்கொள்ளவில்லை. வெறும் காட்சி நடிகையாக மட்டும் நான் படத்தில் நடிக்க மாட்டேன் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார். சாய் பல்லவியை நெருங்கவே பலரும் பயப்படுகிறார்கள் என்று பயில்வான் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X