300 சவரன் நகை.. பல கோடி செலவில் நடந்த விஜயகுமார் பேத்தி திருமணம்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகளான தியாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு ஆன செலவு குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கண்ணிற்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர். விஜயகுமார் குடும்பத்தில் சினிமாவில் முகம் காட்டாதவர் அனிதா தான். இவருக்கு தியா என்கிற மகளும், ஸ்ரீஜெய் கோகுல் என்கிற மகனும் உள்ளனர். இதில் தியாவின் திருமணம் 19ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தியாவின் திருமணத்திற்கான கொண்டாட்டம் ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கியது. பந்தக்கால் நடுவது, மெஹந்தி ஃபங்ஷன், சங்கீத், ஹல்தி ஃபங்க்ஷன் என கடந்த ஒரு வாரமாக இந்தத் திருமண விழா களைகட்டி இருந்தது. நேற்று நடைபெற்ற திருமணத்தில், நடிகர் ரஜினிகாந்த, பிரபு, சினேகா, பிரசன்னா, பாக்கியராஜ், மீனா, கேஎஸ் ரவிக்குமார், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். அது மட்டுமில்லாமல் விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த திருமணத்தை கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
அள்ளி கொடுத்த அருண் விஜய்: இதுகுறித்து, பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டியில், விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் அதில், கவிதா, அனிதா இரண்டு பேருமே மருத்துவர்கள் இவர்களை மட்டும் விஜயகுமார் ஏன் மருத்துவத்திற்கு படிக்க வைத்தார். அதே போல அனிதாவின் மகள் தியாவும் வெளிநாட்டில் மருத்துவம் படித்துள்ளார். இவர் திருமணம் செய்து கொண்டவரும் டாக்டர் தான். அதே போல, தாய் மாமனான அருண் விஜய், மிகப்பெரிய மருத்துவரின் மருமகன். அருண் விஜய் மார்க்கெட் இல்லாமல் இருந்த போது அவரை வைத்து படம் எடுத்தவர் மாமனார். அந்த அடிப்படையில் அவருக்கு பல கோடியில் சொத்து இருக்கிறது. இதனால், அருண் விஜய் தாய்மாமன் என்கிற முறையில் சீதனம் என அக்கா மகளுக்கு அள்ளி கொடுத்து இருக்கிறார்.
பல கோடி செலவு: இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மாப்பிள்ளை மனைவி தியாவின் காலை தொட்டு கும்பிட்டு இருக்கிறார். மாமியார், மாமனார், மனைவி என அனைவருமே டாக்டர், அதுமட்டுமில்லாமல் சினிமா குடும்பம் என்பதால், மாப்பிள்ளை இப்படி செய்தாரா என்று தெரியவில்லை. இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் பீச் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக பல கோடி செலவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது என்று பயில்வான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











