அரசியல் தலைவர் இப்படியா நடிப்பது?விஜய் இமேஜை பற்றி கவலைப்படல.. கோட் படத்தை கழுவி ஊற்றிய பயில்வான்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் கோட் படம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், ஒரு அரசியல் கட்சியை தொடங்கிய ஒரு தலைவர் இப்படி நடிக்கலாமா என கோட் படத்தை கழுவி ஊற்றி உள்ளார்.

இது குறித்து பேசிய பயில்வான், விஜய் அரசியலுக்கு வருவது விஜய்யின் அப்பா, அம்மா தவிர மனைவி, மகள், மகன் என யாருக்குமே பிடிக்கவில்லை. ஏன் என்றால் பொன் முட்டையிடும் வாத்தை யாராவது கொல்லுவார்களா? சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியலில் இருக்கலாமே, எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன் என பலர் நடித்துக்கொண்டே தான் அரசியலில் இருந்தார்கள். அப்படி விஜய்யும் நடித்துக்கொண்டே அரசியலில் இருக்கலாம்.

goat vijay bayilvan ranganathan

பயில்வான் ரங்கநாதன்: ஆனால், கட்சி பெயர் அறிவிக்கும் போதே, சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இப்படி விஜய் எடுக்கும் முடிவுகள் எல்லாமே எதிர்மறையான முடிவாகவே இருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியும், செய்தியாளர்களிடம் பேசுவதற்கு பயப்படுகிறார். அப்படி பேசினால் சங்கீதா எங்கே, குழந்தைகள் எங்கே என்று கேட்டுவிடுவார்கள் என்று பயந்து மீடியாக்களை தவிர்க்கிறார்.

ஜால்ரா மன்னன்: அதுமட்டுமில்லாமல், விஜய்க்கு சரியான அரசியல் ஆலோசகர் இல்லை, புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார் அவர் பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர், அவருக்கு தமிழ்நாடு அரசியல் பற்றி என்னத் தெரியுமா. அதுவும் இல்லாமல் அவர், பெரிய ஜால்ரா மன்னனாக இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியிலும் விஜய்யின் பெயரை சொல்லுவதே இல்லை, தலைவரின் பெயரை கொண்ட மாநிலத் தலைவர் அவர்களே, தலைவரின் பெயரை கொண்ட வட்டச்செயலாளரே என பேசி வருகிறார்.

எல்லாத்துக்கும் பணம்தேவை: தொடர்ந்து பேசிய அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் பேட்டியிட்டால், கேப்டன் விஜயகாந்த் போல ,அவர் நிற்கும் ஒரே ஒரு தொகுதியில் வேண்டுமானால் ஜெயிக்கலாம். மற்ற தொகுதியில் ஜெயிப்பது என்பது மிகவும் கஷ்டம் டெபாசிட் கூட வாங்க முடியாது. ஏன் என்றால், இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், எல்லாத்தையும் விளம்பரப்படுத்தனும், அதற்கு பணம் தேவை அந்த அளவிற்கு இவரால் எதையும் செய்யமுடியாது.

இப்படி நடிக்கலாமா: கோட் படத்தில் விஜய்யின் பெயர் காந்தி, இந்த பெயரை வைத்துக்கொண்டு, சரக்கு அடிக்கிறார். அதில்,சினேகா என் புருஷன் ஏகப்பட்ட பெண்களுடன் தொடர்பு வெச்சி இருக்கிறார் என்கிற வசனம் வருகிறது. ஒரு அரசியல் கட்சி தலைவரின் படத்தில் இப்படி ஒரு வசனம் வரலாமா? வெளியில் தண்ணி அடிக்கக்கூடாது என்கிறார். ஆனால், படத்தில் தண்ணி அடிக்கிறார் இப்படி ஒரு குழப்பமான படம் தான் கோட். இதற்கு காரணம் விஜய் தனது இமேசை பற்றி கவலைப்படவே இல்லை, அப்படி கவலைப்பட்டு இருந்தால், அந்த காட்சியை அனுமதித்து இருக்க மாட்டார் என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X