Bayilvan Ranganathan: மாரி செல்வராஜுக்கு 57 லட்சத்துக்கு கார் எதற்கு.. பயில்வான் ரங்கநாதன் கேள்வி!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜுக்கு 57 லட்சத்துக்கு உதயநிதி ஸ்டாலின் ஏன் மினி கூப்பர் கார் பரிசாக வழங்க வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் தனது லேட்டஸ்ட் வீடியோவில் கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ரவீணா ரவி, லால் மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

மாமன்னன் படம் 40 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ஈட்டிய நிலையில், சந்தோஷமடைந்த ஹீரோ உதயநிதி மினி கூப்பர் காரை இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சமீபத்தில் பரிசாக வழங்கி இருந்தார்.

Bayilvan Ranganathan asks why Udhayanidhi gifted mini cooper to Mari Selvaraj?

மண்டு மாமன்னன்: மாமன்னன் படத்தில் வடிவேலு மாமன்னனாக வாழவில்லை என்றும் மண்டுவாகத்தான் இருந்தார் என்றும் எம்எல்ஏவாக பதவி கிடைத்தும் தனது மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்பதையே காட்டவில்லை என்றும் தனக்கு கிடைத்திருக்கும் பதவியின் வேல்யூவே தெரியாமல் பகத் ஃபாசில் குடும்பம் போட்ட பிச்சை என நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர் எப்படி ஹீரோவாகிறார் என்று தான் தெரியவில்லை என விளாசி உள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் பன்றி மேய்ப்பது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், வடிவேலு அந்த பக்கம் போன மாதிரியே சீன் இல்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜுக்கு எதுக்கு கார்: மாமன்னன் படத்தை இயக்கியதற்கு கோடிக் கணக்கில் சம்பளம் வரப்போகுது அதை வைத்து அவர் கார் வாங்கிக் கொள்ளலாம். அவருக்கு எதுக்கு உதயநிதி 57 லட்சத்துல கார் வாங்கிக் கொடுக்கிறார்.

அவர் ஒரு விளையாட்டுத் துறை அமைச்சர் அந்த பணத்தில் பல விளையாட்டு வீரர்களுக்கு உதவி இருந்தால் ஒரு புண்ணியமாக போயிருக்கும் என்றும் ப்ளூ சட்டை மாறன் கார் பரிசாக அளித்த விஷயத்தை ட்ரோல் செய்து தனது புதிய வீடியோவில் பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

கிருஷ்ணசாமி கவலை: டாக்டர் கிருஷ்ணசாமி அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர் தான் அவர் தனது பதிவில் நாங்கெல்லாம் ஊரில் ஒண்ணு மண்ணா கலந்து ரொம்ப காலமாச்சு, இப்போ மீண்டும் எங்களுக்குள்ள சாதிச் சண்டையை மாரி செல்வராஜ் பற்ற வைக்க பார்க்கிறாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

சாதி ஒழிப்பை மேடை போட்டு பிரச்சாரம் செய்யட்டும் மாரி செல்வராஜ் நல்ல விஷயத்தான் அதை ஏன் உதயநிதி காசுல படமாக இயக்கி காட்டணும் என்றும் கேட்டுள்ளார். பயில்வான் ரங்கநாதனின் வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X