Bayilvan Ranganathan: விஜய் குடும்ப பிரச்சனைக்கு த்ரிஷா தான் காரணமா?.. பயில்வான் ரங்கநாதன் பளிச்!
சென்னை: நடிகர் விஜய் தனது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் உடன் சண்டைப் போட்டு பிரிந்து இருந்த நிலையிலும், நீரடித்து நீர் விலகாது எனக் கூறியவன் நான்.. நிச்சயம் ஒரு நாள் அப்பாவுடன் நடிகர் விஜய் சேர்ந்து விடுவார் என்று கூறினேன். சமீபத்தில், அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பதை கேள்விப்பட்டதும் வெளிநாட்டிலிருந்து ஓடோடி வந்துவிட்டார் நடிகர் விஜய்.
அப்பா - மகன் பிரச்சனையை விட மோசமாக நடிகர் விஜய்யின் குடும்ப பிரச்சனை குறித்து பலரும் பலவித கருத்துக்களை கூறி வருகின்றனர். தளபதி 68 படத்திற்காக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்கே, டீஏஜிங் தொழில்நுட்பத்திற்கு விஜய் ஸ்கேனிங் செய்து வந்தார்.

விஜய் - த்ரிஷா புகைப்படம்: வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி சென்னை திரும்பிய நிலையில், நடிகர் விஜய் தனது குடும்பத்தை பார்க்க லண்டனுக்கு தான் போயிருந்தார். ஆனால், நடிகை திரிஷாவுடன் நெதர்லாந்தில் நடிகர் விஜய் டூர் அடித்து வருகிறார் என்றும் விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து விட்டனர் என்றும் வாய்க்கு வந்தபடி யூடியூப்களில் படுமோசமாக பேசி வருகின்றனர்.
ஆனால், உண்மை என்னவென்றால் நடிகை திரிஷாவுடன் விஜய் இருந்த புகைப்படம் ஒன்று வெளியானது. அந்தப் புகைப்படம். லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தயாரிப்பு நிறுவனமே கூறிவிட்டது. அதை வைத்துக் கொண்டு தான் ஏகப்பட்ட கதைகளை சமூக வலைத்தளங்களில் கிளப்பியுள்ளனர்.
மனைவியுடன் பிரச்சனை இல்லை: ஆனால், அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எப்போதும் போல சந்தோசமாகத்தான் வாழ்ந்து வருகிறார் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில், விஜய் ரசிகர்களின் கோபத்தை தூண்டியது இயக்குநர் மிஷ்கின் தான். தளபதி என விஜய்யை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மிஷ்கின் தேவையில்லாமல் விஜய்யை ஒருமையில் பேசியது தவறு அதற்கு பதிலடி கொடுக்கத்தான் விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்தனர் எனக்கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


Click it and Unblock the Notifications











