சினேகாவுக்கு பட வாய்ப்பு குவிந்தது இப்படிதானா.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன சீக்ரெட்!
சென்னை : நடிகை சினேகா படவாய்ப்பை பெற்றது இப்படித்தான் என பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவுலகில் டாப் நடிகையான சினேகா. மலையாள திரைப்படம் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து,வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சினேகா : விளக்கி வைத்த குத்து விளக்குப்போல பளிச்சென்று இருக்கும் நடிகை சினேகா தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி என பெயர் எடுத்தார். சினேகாவுக்கு மார்டன் உடையைவிட புடவையும், தாவணியும் அம்சமாக பொருந்தி இருந்ததால், பல படங்களில் புடவை, தாவணியிலேயே ரசிகர்களை வசியம் செய்தார்.
பல மொழிகளில் : இவர் நடித்த வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இவருக்கு என்று தனி இடத்தை பெற்றார். புதுப்பேட்டை படத்தில் விலை மாதுவாக நடித்த போது, அதில் எந்த ஆபாசமும் காட்டாமல் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து பெயர் எடுத்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ளார்.
காதல் திருமணம் : அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறியது. இதையடுத்து 2011ம் ஆண்டு இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். தற்போது சின்னத்திரை டான் நிகழ்ச்சியில் நடுவராக வலம் வருகிறார்.

பட வாய்ப்பு குவிந்தது இப்படித்தான் : இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பல நடிகைகள் குறித்து ரகசியமான பல தகவல்களை வெளிப்படியாக பேசி வருகிறார். அந்த வகையில் நடிகை சினேகாவுக்கு படவாய்ப்பு குவிந்தது இப்படித்தான் என கூறியுள்ளார். அதில், நடிகை சினேகா மலையாளப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு நடிக்க வந்தார்.ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால், படவாய்ப்பை அதிகரிக்க அடிக்கடி நைட் பார்ட்டிகளுக்கு சென்றார். அதன் பிறகுதான் இவரைத் தேடி படவாய்ப்புகள் வந்தன என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











