Dhanush - கணவர் அருகில் இருக்கும்போதே நடிகையிடம் அப்படி நடந்த தனுஷ்? - பகீர் கிளப்பும் பயில்வான்

சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) நடிகர் தனுஷ் குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். கோலிவுட்டில் அறிமுகமாகும்போது பலரிடம் உருவ கேலியை சந்தித்தவர் இப்போது கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என உயர்ந்து நிற்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வாத்தி படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

Bayilvan Ranganathan Controversial Speech about actor Dhanush

தனுஷ் 50: தனுஷ் அடுத்ததாக தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், மடோனா செபாஸ்டியன், காளிதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கான செட் போடும் பணிகள் மும்முரமாக நடந்துவருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பற்ற வைத்த பயில்வான்: இந்தச் சூழலில் தனுஷ் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதாவது அந்த வீடியோவில், "தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு நடிகையை மாற்றிக்கொண்டே இருப்பார். அவர்களிடம் நன்றாக வேலையும் வாங்கிக்கொள்வார். குறிப்பாக பிரபல நடிகை ஒருவரின் விவாகரத்திற்கு காரணமே தனுஷ்தான்.

12 மணிக்கு தனுஷ் செய்த வேலை: அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும்போதே இரவு 12 மணிக்கு தனுஷ் ஃபோன் செய்து பேசுவார்.இதுதான் அந்த நடிகைக்கும், கணவருக்கும் சண்டை ஏற்பட காரணமாக இருந்தது. இந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒருகட்டத்தில் இது ஒத்துவராது என்று முடிவெடுத்த இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்" என்றார். பயில்வான் ரங்கநாதனின் இந்தப் பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன்: திரை பிரபலங்கள் குறித்து பேசும் பயில்வான் ரங்கநாதன் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது பல முறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவருக்கு எதிராக கடும் கண்டனங்களும் எழுந்துவருகின்றன. இருப்பினும் தான் சொல்வது அனைத்தும் உண்மை என்றே அவர் கூறிவருகிறார்.

ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவரது அந்தரங்கத்தில் தலையிடுவதை பயில்வான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றே பலரும் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் கூறுவதில் பெரும்பான்மையானவை பொய்தான். அவர் மீது சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர வேண்டும். அப்போதுதான் அவர் இவ்வாறு பேசுவதை நிறுத்துவார் என பலர் கோரிக்கை வைத்துவருகின்ரனர்.

பயில்வானுக்கு பதிலடி: முன்னதாக, இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததைத் தொடர்ந்து தனது இஷ்டத்துக்கு பேசினார் பயில்வான் ரங்கநாதன். அதனையடுத்து திருவான்மியூரில் அவர் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது பயில்வானிடம் சண்டைக்கு சென்றார் ரேகா நாயர். மேலும், அவரை அடிக்கவும் முயன்றார். அதேபோல் நடிகை ராதிகா ஒருமுறை பயில்வான் ரங்கநாதனை செருப்பால் அடித்த சம்பவமும் அரங்கேறியதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X