பாரதிராஜா குடும்பத்தில் மோதலா?.. மனோஜுக்கு என்ன அழுத்தம்?.. வழக்கம்போல் பற்ற வைத்த பிரபலம்
சென்னை: மனோஜ் பாரதிராஜாவின் உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது இறுதி சடங்கு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக கோலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். மேலும் இடிந்துபோய் அமர்ந்திருந்த பாரதிராஜாவுக்கும் தங்களின் ஆறுதலை தெரிவித்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் மனோஜ் குறித்தும் பாரதிராஜாவின் குடும்பம் குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரதிராஜாவுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் மனோஜை திரைத்துறையில் தாஜ் மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து நடித்த எந்தப் படமும் அவருக்கு சரியான திருப்புமுனையை கொடுக்கவில்லை. ஒருபக்கம் படங்களின் தொடர் தோல்வி; மறுபக்கம் தந்தையின் பெயரை காப்பாற்ற முடியவில்லையே என்கிற எண்ணம் என மனோஜை வாழ்நாள் முழுக்க படுத்திக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்கத்திலும் தோல்வி: நடிப்பில்தான் தன்னால் வெல்ல முடியவில்லை இயக்கத்தில் வென்றுவிடலாம் என்ற நோக்கத்தில் மார்கழி திங்கள் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படமும் சரியாக போகவில்லை. தந்தை இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட இதே இன்டஸ்ட்ரியில் மனோஜால் இயக்குநராகவும் வெல்ல முடியவில்லையே என்று பலர் ஓபனாகவே பேசினார்கள். இதற்கிடையே அவர் குணசித்திர வேடங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துக்கொண்டிருந்தார்.

கதைகள் எழுதிய மனோஜ்: ஒருபக்கம் குணசித்திர வேடங்களை ஏற்றிருந்தாலும் இயக்குநராக வென்றே ஆக வேண்டும் என்கிற தீவிரம் அவருக்குள் இருந்தது. இதன் காரணமாக தொடர்ந்து கதைகள் எழுதிக்கொண்டிருந்தார். மேலும் பாரதிராஜா இயக்கி மெகா ஹிட்டான சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்யும் திட்டத்திலும் அவர் இருந்ததாகவே தெரிகிறது. ஆனால் சில காரணங்களால் அவருக்கு அதுவும் கைகூடி வரவில்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
உயிரிழந்த மனோஜ்: அறுவை சிகிச்சைக்கு பிறகு மனோஜ் நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் ஓய்வில் இருந்தார். உடல்நலம் பூரண குணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் நிம்மதியடைந்தனர். ஆனால் திடீரென அவருக்கு நேற்று முன்தினம் மாரடைபு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு 80 வயதை கடந்த பாரதிராஜாவுக்கு பெருத்த இடியாக இருக்கிறது. மனோஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் அனைவருமே இயக்குநரை பார்த்து செய்வதறியாது கலங்கிப்போய்தான் நின்றார்கள். மனோஜின் இறுதி சடங்கு பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் நேற்று நடந்தது. அதனை அவரது இரண்டு மகள்களும் செய்தார்கள்.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் என்கிற யூடியூப் சேனலுக்கு மனோஜ் இறப்பு குறித்து பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "மனோஜால் நடிகராக வெல்ல முடியவில்லை. இயக்குநராகவும் வெல்ல முடியவில்லை. இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் இவர் தனிக்குடித்தனம் இருக்கிறார். பாரதிராஜாவும் அவரது மனைவியும் தனித்தனியாக இருக்கிறார்கள். தான் ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம், அப்பா ஒரு பக்கம் என பிரிந்திருப்பதால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம்.
இதை செய்திருக்கலாம்: அவர்களின் குடும்பத்துக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதேசமயம் மனோஜின் தங்கை கணவர் வெளிநாட்டில் பிரபலமான மருத்துவராக இருக்கிறார். இவரை அங்கு அழைத்து சென்றிருக்கலாம். அதேசமயம் பாரதிராஜா தனது மகளின் கணவரிடம்தான் செக்கப் செய்துகொள்கிறார். ஒரு பேட்டியில் மனோஜ்கூட நான் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன் என்றால் எனது மனைவியும் மகள்களும்தான் காரணம் என்று சொன்னார். மனோஜுக்கு மது பழக்கம் இருந்ததுதான். ஆனால் அவர் அதற்கு அடிமையெல்லாம் ஆகவில்லை" என்றார்.
முன்னதாக கோலிவுட்டில் சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம்வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார். உதாரணமாக அச்சம் என்பது மடமையடா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சம்பந்தமே இல்லாமல் பாடலாசிரியர் தாமரையின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டு சர்ச்சையை உருவாக்கியவர். அந்த மேடையில் கௌதம் மேனன் டீசன்ட்டாக பயில்வானுக்கு பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலுக்கும் வலியுறுத்தல்கள்: பயில்வான் ரங்கநாதனை பொறுத்தவரை அவர் சொல்வதுதான் உண்மை; அவருக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர். நயன்தாரா, த்ரிஷா, அஞ்சலி உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களில் பெரும்பாலானோரின் கருத்து. யாராவது அவருக்கு கடுமையான பதிலடியை கொடுக்க வேண்டும் என்பதுதான் பலரின் வலியுறுத்தல்களாக இருக்கின்றன.
ரேகா நாயர் கொடுத்த தரமான பதிலடி: பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசுவதை திரையுலகத்தை சேர்ந்த பல பிரபலங்கள் கண்டும் காணாமல் சென்றுவிடுகின்றனர். ஆனால் ரேகா நாயர், கே.ராஜன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், இயக்குநர் பாலா உள்ளிட்டோர் மட்டும் முகத்தில் அடித்தாற்போல் பேசிவிடுவார்கள். ரேகா நாயர் ஒருமுறை திருவான்மியூரில் சண்டைக்கே சென்றுவிட்டார். அதேபோல் பிசாசு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பி குசும்பாக ஒரு கேள்வியை கேட்க; அதற்கு இயக்குநர் பாலாவோ தனக்கேயுரிய ஸ்டைலில் தரமான பதிலடியை கொடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. அதேபோல்தான் விஷாலும்.
அதாவது ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பயில்வான் ரங்கநாதன் ஒரு கேள்வியை கேட்டு வைக்க; 'அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது' என்று மேடையில் அமர்ந்தபடியே கூறியிருந்தார். இதற்கிடையே நடிகை ராதிகா குறித்து ஒருமுறை பயில்வான் ரங்கநாதன் தவறாக பேசினார் என்றும்; அதற்கு ராதிகா தனது செருப்பால் பயில்வானை அடித்தார் என்றும் ஒரு செய்தி நெடுங்காலமாக திரைத்துறையில் உண்டு.
ஷகீலாவின் செய்கை: இவர்கள் மட்டுமின்றி ஷகீலாவும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதனை செய் செய் என்று செய்துவிட்டார். உங்களது மகளை பற்றி பேசியது கோபம் வருகிறதே நீங்கள் எத்தனை நடிகைகள் பற்றி பேசியிருக்கிறீர்கள். அவர்கள் குடும்பத்துக்கு கோபம் வராதா என்று கேட்டு பயில்வானின் வாயை அடைத்திருந்தார். ஆனாலும் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து தனக்கு இஷ்டப்பட்டதை பேசியிருக்கிறார். மனோஜ் குறித்து இப்போது அவர் பேசியிருப்பதை பார்த்த ரசிகர்கள் ஒருவர் இறந்துபோன பிறகு அவரது குடும்பத்தில் என்ன நடந்தது என்பதை பேசுவதை பயில்வான் ஏன் வாடிக்கையாக வைத்திருக்கிறார்; பாரதிராஜாவும் அவரது மனைவியும் ஒன்றாக இல்லை என்று இவர் அருகில் இருந்து பார்த்தாரா என்று கோபமாக கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











