Bayilvan Ranganathan - மாஸ் ஹீரோவின் மனைவியை காதலித்தாரா ஜெய்?.. கொளுத்திப்போட்ட பயில்வான்.. பதறிப்போன நடிகர்
சென்னை: நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் மாமரம் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயம் சுத்த பொய் என மேடையிலேயே நடிகர் ஜெய் ஆகாஷ் தெரிவித்தார். இதனையடுத்து பயில்வானின் குட்டு உடைந்துவிட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர். நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
சண்டை செய்த ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் தான்தோன்றித்தனமாக பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ராதிகா குறித்து அவதூறாக பேசியதால் பயில்வானை ராதிகா செருப்பால் அடித்தார் என்றும் ஒரு தகவல் உலாவுகிறது.
கே.ராஜனின் பதிலடி: வீடியோக்களில் மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சியிலும் சர்ச்சை கேள்விகளை கிளப்பும் பயில்வான் ஒருமுறை தயாரிப்பாளர் ராஜனிடம் வாயை கொடுத்தார். அதற்கு கே.ராஜன் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்தார். ராஜன் அப்படி பேசியதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பயில்வான் போன்ற ஆட்களுக்கு ராஜன் வகையறாதான் சரியான ஆட்கள் என ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர்.

மாமரம்: இந்நிலையில் நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்த மாமரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய பயில்வான் ரங்கநாதன், "ஜெய் ஆகாஷ் பற்றிய கிசுகிசு ஒன்று சொல்லப்போகிறேன். அது முற்றிலும் உண்மையான தகவல். ஜெய் ஆகாஷ் லண்டனிலிருந்து வரும்பொது ஒரு பெண்ணுடன் வந்தார். அந்தப் பெண்ணும் இவரும் காதலித்தார்கள். ஆனால் அந்த பெண் ஜெய்யை கழற்றிவிட்டு மாஸ் ஹீரோ ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்றார். அப்போது உடனடியாக மைக் அருகில் வந்த ஜெய் ஆகாஷ். இது சுத்தமான பொய் என்று தெரிவித்தார்.
யார் அந்த மாஸ் ஹீரோ?: பயில்வான் ரங்கநாதன் பேசியதற்கு ஜெய் ஆகாஷ் முற்றுப்புள்ளி வைத்துவிட்டாலும் யார் அந்த மாஸ் ஹீரோ என்று நெட்டிசன்கள் தேட ஆரம்பித்துவிட்டனர். மேலும் விஜய்யைத்தான் மாஸ் ஹீரோ என்பார்கள். அவரது மனைவி சங்கீதாவும் லண்டனை சேர்ந்தவர்தான். எனில் பயில்வான் ரங்கநாதன் சொன்ன மாஸ் ஹீரோ விஜய்யா? அந்த பெண் சங்கீதாவா? அவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்பே அறிமுகமாகிவிட்டார்களா என்று விவகாரமான கேள்வியை சிலர் சமூக வலைதளங்களில் எழுப்பிவருகின்றனர். இந்த விவகாரம்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











