அமலாபாலையும் விட்டு வைக்காத பயில்வான் ரங்கநாதன்..இவர் அடங்கவே மாட்டாரா?

சென்னை : அமலாபால் இரண்டாவதாக பவ்நிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்தவர் நடிகை அமலா பால். இவர், சிந்து சமவெளி என்ற விவகாரமான கதையில் நடித்து விமர்சனத்தில் சிக்கினார்.

இதைடுத்து, தனுஷ்,விஜய், விக்ரம், சித்தார்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

அமலா பால்

அமலா பால்

ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். விவாகரத்துக்குப்பின் மீண்டும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடங்கிய அமலா பால், ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தயாரிப்பாளராக களமிறங்கிய அமலா பால் கடாவர் படத்தில் தடயவியல் நிபுணராக நடித்திருந்தார். இப்படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஆண் நண்பர் கைது

ஆண் நண்பர் கைது

இதையடுத்து நடிகை அமலா பால், ஆண் நண்பர் பவ்நிந்தர்சிங் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் பவ்நிந்தர் சிங்கை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதையடுத்து பவ்நிந்தர் சிங் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவில், அமலா பால் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக தன்மீது பாலிய ரீதியாக புகார் அளித்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து நீதிமன்றம் பவ்நிந்தர் சிங்கிற்கு ஜாமீன் வழங்கியது.

பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன்

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில், அமலா பாலும், பவ்நிந்தர் சிங்கும் திருமணம் செய்து கொண்டது உண்மை தான் என்று கூறியுள்ளார். இருவருக்கும் வடநாட்டு முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியான போது அது போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட திருமணம் என்று சமாளித்தார். ஆனால், பவ்நிந்தர் சிங் போட்டோக்களை வெளியிடுவேன் என மிரட்டுவதாக தற்போது புகார் கூறியுள்ளார்.

அந்த அளவுக்கு நெருக்கமா?

அந்த அளவுக்கு நெருக்கமா?

போட்டோ எடுக்கும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்து விட்டு இப்போது அவர் மீது புகார் கொடுத்தால் யார் மீது தப்பு. அமலா பால், பவ்நிந்தர் சிங்கை ஏமாற்றினாரா? பவ்நிந்தர் சிங் அமலா பாலை ஏமாற்றினாரா? விசாணையில் எல்லாம் தெரியவரும் என்றார். அமலா பால் ஏற்கனவே விவாகரத்து ஆனவர், ஆடையில்லாமல் ஆடை படத்தில் நடித்துள்ளார். சினிமாவில் அவருக்கு என்ன மரியாதை இருக்குனு அவருக்கே நல்ல தெரியும் என்று பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X