Mysskin - மிஷ்கினுக்கு அந்த நடிகையுடன் தொடர்பு இருந்ததா?.. பற்ற வைத்த பயில்வான் ரங்கநாதன்
சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. சமீபத்தில்கூட அவருடன் ஒரு இளம்பெண் இருக்கும் புகைப்படம் பரவியது. அதனை பார்த்த ரசிகர்கள் அவர்தான் மிஷ்கினின் மகள் என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர். இந்த சூழலில் மிஷ்கின் பற்றி பரபரப்பான விஷயம் ஒன்றை சொல்லியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
வின்செண்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் இயக்குநராக அறிமுகமானார். நரேன், பாவனா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் ஆஹா ஓஹோ அளவுக்கு ஹிட் இல்லை என்றாலும் மிஷ்கினுக்கும் அவரது திரை மொழிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு மிஷ்கின் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் என்ற வரிசையில் இணைந்தார்.

வித்தியாச மிஷ்கின்: அஞ்சாதே படத்துக்கு பிறகு அவரது இயக்கத்தில் வெளியான நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ, துப்பறிவாளன் போன்ற படங்கள் கோலிவுட்டில் கவனம் ஈர்த்தவை. இவற்றில் முகமூடி படம் மட்டும் படுதோல்வியை சந்தித்தது. அவற்றை தவிர்த்து மற்ற படங்கள் ஒன்றும் சூப்பர் ஹிட் இல்லை ஆவரேஜ் ஹிட் என்ற நிலையில் இருப்பவை. குறிப்பாக அவர் இயக்கிய பிசாசு திரைப்படம் பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்: பிசாசு 2 படத்தை இயக்கியிருக்கும் அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையே சவரக்கத்தி படத்தின் மூலம் முழு நேர நடிகராகவும் அறிமுகமான மிஷ்கின் தொடர்ந்து லியோ, மாவீரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இரண்டு படங்களிலுமே மிஷ்கினின் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. இந்த சூழலில் மிஷ்கினுடைய குடும்பம் பற்றிய பேச்சுக்கள் கடந்த சில வாரங்களாகவே அதிகம் கேட்கின்றன. அவரே தனது மனைவியை பிரிந்துவிட்டேன்; தனது மகள் வெளிநாட்டில் படிக்கிறார் என்று பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் சமீபத்தில் அவரது குடும்பம் பற்றிய பேச்சுக்கள் அதிக அளவு எழ ஆரம்பித்திருக்கின்றன்.
பயில்வான் ரங்கநாதன் வீடியோ: இந்நிலையில் மிஷ்கின் குறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் பேச்சு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அந்த வீடியோவில், "எனது மனைவியை நான் பிரிந்துவிட்டேன். இருந்தாலும் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். நான் என்ன கேட்கிறேனோ அதை அவள் கொடுப்பாள். நானும் அனைத்தையும் கொடுப்பேன். ஏனெனில் எங்களுக்கு பத்து வருட காதல் இருந்தது. அந்தக் காதலின் அடையாளமாகத்தான் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.
மகள்தான் முக்கியம்: ஆனால் இப்போதோ எனது மனைவியைவிட மகள்தான் முக்கியம். அதனால்தான் எனக்கும் எனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தபோதுகூட சட்ட ரீதியாக விவாகரத்து வாங்காமல் பிரிந்துவிட்டோம். எனது மனைவி எனக்கு போர் அடித்துவிட்டார். சினிமாவில் நான் இல்லாமல் இருந்திருந்தால் மனைவியுடன் வாழ்ந்திருப்பேன். நான் பிரபலமாகிவிட்டதால் ஒரு நடிகையுடன் உறவில் இருந்துவருகிறேன் என கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் உளறியிருக்கிறார்.
பாவனாவுடன் தொடர்பு?: இவருக்கு ஏற்கனவே நடிகை பாவனாவுடன் தொடர்பு இருந்தது. அதன் பிறகு ஆண்ட்ரியாவுடனும் பல இடங்களில் கிசுகிசுக்கப்பட்டார். அப்படிப்பட்டவர் கொஞ்சம்கூட இன்னமும் திருந்தாமல் என்ன ஜென்மமாக இருக்கிறாரோ" என்று காட்டமாக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











