Bayilvan Ranganathan - நடிகைகளின் உல்லாச வீடியோ.. ரூமுக்கு வா காட்டுறேன்.. எல்லை மீறிய பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) நடிகைகளின் உல்லாச வீடியோ குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

Bayilvan Ranganathan Controversy Speech in Recent Interview

அவதூறு: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

ராஜன் வகையறா: வீடியோக்களில் மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சியிலும் சர்ச்சை கேள்விகளை கிளப்பும் பயில்வான் ஒருமுறை தயாரிப்பாளர் ராஜனிடம் வாயை கொடுத்தார். அதற்கு கே.ராஜன் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்தார். ராஜன் அப்படி பேசியதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பயில்வான் போன்ற ஆட்களுக்கு ராஜன் வகையறாதான் சரியான ஆட்கள் என ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர்.

புதிய பரபரப்பு: இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் பயில்வான் ரங்கநாதன். அப்போது தொகுப்பாளினி அவரிடம் ரேகா நாயர் உங்களை அடித்ததாக சொல்கிறார்களே என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பயில்வான், அதற்கு உங்களிடம் ஆதார வீடியோ இருக்கிறதா என எதிர் கேள்வி கேட்டார்.

உடனடியாக தொகுப்பாளினியோ, இதற்கு ஆதாரம் கேட்கிறீர்களே. நடிகைகள், நடிகர்கள் உல்லாசமாக இருந்ததாக சொல்கிறீர்கள். அதற்கு உங்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறதா என கேட்க, பயில்வான் ரங்கநாதன், நடிகைகளே அதனை மறைக்கவில்லை. உங்களுக்கு தேவை XXX வீடியோவா. அவர்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்ட வேண்டுமென்றால் தனியாக ரூமுக்கு வா என்று எல்லை மீறி பேசினார். அவரது இந்தப் பேச்சு தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் மீது கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்திருக்கின்றன.

முன்னதாக, இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் தான்தோன்றித்தனமாக பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X