மது போதையில் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்டாராம் ஐஸ்வர்யா ராய்.. பரபரக்கும் பயில்வான்!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராய் இரவு பார்ட்டி ஒன்றில் குடித்து விட்டு மது போதையில் தலைகால் புரியாமல் ஆடியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கையில் சரக்கு கிளாசுடன் ஐஸ்வர்யா ராய் ஆட்டம் போட்டது இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சோஷியல் மீடியாவில் ஐஸ்வர்யா ராயை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Bayilvan Ranganathan criticized Bollywood actress Aishwarya Rai

ஐஸ்வர்யா ராய் : இந்த விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், உலக அழகியான ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற ஒரு மகளும் இருக்கிறார். பாலிவுட்டின் ஷாஹேன்ஷா என்று அழைக்கப்படும் அபிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா? : நடிகை ஐஸ்வர்யா ராய் அண்மையில் ஒரு இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாக, அமிதாப் பச்சனின் மருமகளா இப்படி குடித்துவிட்டு ஆடுவது என நெட்டிசன்ஸ்கள் விமர்சித்து வருகின்றனர். சிறிய நடிகை என்றால் நினைத்த இடத்தில் குடித்து விட்டு ஆட்டம் போடலாம், ஒரு பெரிய குடும்பத்தின் மருமகள், அபிஷேக் பச்சனின் மனைவி, அதுவும் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் போது இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா?

Bayilvan Ranganathan criticized Bollywood actress Aishwarya Rai

பயில்வான் ரங்கநாதன் : குடிக்க வேண்டும் என்றால், நட்சத்திர ஓட்டல், பப் என்று பல இடங்கள் இருக்கும் போது, பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இடத்தில் இப்படி குடித்துவிட்டு ஆட்டம் போடலாமா என்றும், இதெல்லாம் ஐஸ்வர்யா ராய்க்கு சகஜம்மா என்று கவுண்டமணி ஸ்டைலில் பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் கிண்டலாக கூறியுள்ளார்.

பழிவாங்க துடிக்கும் நந்தினி: நடிகை ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் பழிவாங்கத் துடிக்கும் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடித்திருக்கும் நந்தினி ஒரு கதாபாத்திரத்தில் ஊமையானியாகவும், ஒரு கதாபாத்திரத்தில் நந்தினியாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் வெற்றிப்பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X