Bayilvan Ranganathan - ரேகா நாயர் ஒரு விவஸ்தை கெட்ட பொம்பளைங்க.. சர்ச்சையை ஆரம்பித்த பயில்வான் ரங்கநாதன்
சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) ரேகா நாயர் விவஸ்தை கெட்ட பொம்பளை என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
பத்திரிகையாளராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிகையாளராக மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக திரைப்படங்களில் தலை காட்டாத அவர் திரை பிரபலங்கள் குறித்து யூட்யூப் சேனல்களில் பேசிவருகிறார்.

சர்ச்சைகளை கிளப்பும் பயில்வான்: திரை பிரபலங்கள் குறித்து பேசும் பயில்வான் ரங்கநாதன் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது பல முறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவருக்கு எதிராக கடும் கண்டனங்களும் எழுந்துவருகின்றன. இருப்பினும் தான் சொல்வது அனைத்தும் உண்மை என்றே அவர் கூறிவருகிறார். ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவரது அந்தரங்கத்தில் தலையிடுவதை பயில்வான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றே பலரும் கூறிவருகின்றனர்.
சண்டைக்கு சென்ற ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பயில்வான் ரங்கநாதனை தாக்கவும் முயன்றார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சண்டை: இந்தச் சூழலில் ரேகா நாயர் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அவர் பேசுகையில், "இடுப்பை தொட்டால் மட்டும்தான் ரசிக்க வேண்டுமா?.. இடுப்பை தொடுவதும் மார்பை தொடுவதும் ஒன்றுதான்; அந்தரங்கத்தை தொடுவதும் ஒன்றுதான். ரேகா நாயர் விவஸ்தை கெட்ட பொம்பளை. உணர்ச்சியே இல்லாத ஜென்மம் இப்படித்தான் பேசும்.
பெண் இனத்துக்கு இழிவு: பெண் இனத்தையே இழிவுப்படுத்துவது போன்று பேசும் அவரை சமீபத்தில் ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவர் கிழித்து தொங்கவிட்டுவிட்டார். ரேகா நாயர் பீச்சில் என்னிடம் பார்க்கிறாயா? காட்டட்டுமா? கழட்டட்டுமானு அசிங்கம் அசிங்கமாக பேசினார். அசிங்கமாக பேசிய பணத்தை சம்பாதிக்கும் கேஸ்தான் ரேகா நாயர்" என்றார்.
என்ன பேசினார் ரேகா நாயர்?: இதற்கிடையே அண்மையில் ஒரு பேட்டி அளித்த ரேகா நாயர் "பெண்கள் உடைதான் அனைத்துக்குமே காரணம். நான் இப்போது புடவை அணிந்துவந்திருக்கிறேன். நான் கையை தூக்கினால் எனது இடை தெரியத்தான் செய்யும். அதேபோல் பேருந்தில்போகும்போது சில உடைகளை அணிந்து சென்றால் ஒரு ஆண் தொட்டால் அதை ஒரு பெண் அனுபவிக்கத்தான் வேண்டும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications