சரத்பாபுவை நினைத்து கண்கலங்கிய பயில்வான் ரங்கநாதன்..குறையே சொல்லமுடியாத மனிதர்!

சென்னை : மறைந்த நடிகர் சரத்பாபு குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் குறையே சொல்ல முடியாத மனிதர் என்று கண்கலங்கி பேசினார்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்த சரத்பாபு தெலுங்கைவிட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

செப்ஸிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு நேற்று முன்தினம் உயிரிழந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார்.

Bayilvan Ranganathan Emotional speech about sarath babu

மறைந்தார் சரத்பாபு : கடந்த மாதம் உடல்நலக்குறைவால் பெங்களுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்பாபு, பிறகு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தொடங்கினார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

உடல் அடக்கம் : சரத்பாபுவின் உடல் சென்னையில் உள்ள தி. நகர் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் சரத்பாபுவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல, சூர்யா, சுஹாசினி மணிரத்னம், சரத் குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி, ஒய்.ஜி.மகேந்திரன், பாக்யராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், பார்த்திபன், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் நேரில் வந்துஅஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, கிண்டி மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

பிடித்தமான நடிகர் : இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், மறைந்த நடிகர் சரத்பாபு குறித்து உருக்கமாக பேசினார். அதில், இதுவரையில் எந்தவித கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர் சரத்பாபு.இயக்குநர் கே பாலச்சந்தர், பாலு மகேந்திரா என அனைத்து நடிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகராக இருந்தவர் சரத்பாபு. எப்போதும் ஓவர் ஆக்ஷன் காட்டாமல் இயல்பாக நடிக்கக்கூடியவர் சரத்பாபு.

Bayilvan Ranganathan Emotional speech about sarath babu

அழகிய கண்ணே : நான் சரத்பாபு வைத்து அழகிய கண்ணே தயாரித்தேன். அந்த படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியவர் இயக்குனர் மகேந்திரன். படம் எடுக்க பணம் இல்லாமல் இருந்த போது எனக்கு உதவி செய்தவர் முன்னாள் அமைச்சர் ராசா முகமது. படப்பிடிப்பில் இருக்கும் போதேல்லாம் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பார்.

கண்கலங்கிய பயில்வான் : படப்பிடிப்பிலும் சரி,பேட்டியின் போதும் யாரைப்பற்றியும் எந்த குறையும் இதுவரை அவர் சொன்னது இல்லை அப்படி ஒரு உயரிய குணம்படைத்தவர் சரத்பாபு என்று பேசிக்கொண்டே கண்கலங்கினார் பயில்வான் ரங்கநாதன். வழக்கமாக நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசும் பயில்வான் ரங்கநாதன் முதன்முறையாக வீடியோவில் சரத்பாபு பற்றி கண்கலங்கி பேசிய பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X