ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக இணையத்தில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில், "காதல் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை" என்கிற வசனத்தை குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான ஜெயம் ரவி, மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார், இதைத் தொடர்ந்து, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், தனி ஒருவன் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஜெயம் ரவி ஆர்த்தி: ஜெயம் ரவி, 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகளாக மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தீபாவளி, பொங்கல் என பண்டிகை தினங்களில் ஃபேமிலி போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுதான் காரணமா: இந்த நிலையில், ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் வருவதாகவும், அதனால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அதே நேரம், பாடகியுடன் ஜெயம் ரவி நெருங்கி பழகி வருவதாகவும், இது தான் அவர்களின் விவாகரத்து முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பயில்வான் ரங்கநாதன் விளக்கம்: சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பி உள்ள இந்த விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். அதில், ஜெயம் ரவியின் தந்தை மோகன், இஸ்லாமியராக பிறந்து இந்துவாக வளர்ந்தார். திரைப்பட எடிட்டரான இவர், தெலுங்கு வெற்றிப்படத்தை எடுத்து தமிழில் வெளியிட்டு பிரபலமானார். இதைத்தொடர்ந்து, பல படங்களை தயாரித்து தெலுங்கில் தயாரிப்பாளராக மாறினார். மோகனைத் தொடர்ந்து அவரது மகன் மோகன் ராஜா, தம்பி ஜெயம் ரவியை வைத்து ஜெயம் என்ற படத்தை இயக்கினார் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜெயம் ரவி டாப் ஹீரோவானார்.
தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்: இவரின் மனைவிதான் ஆர்த்தி, இருவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவரின் தாயார் சுஜாதா விஜயகுமார், பெரும் பணக்காரரான இவர், சன் தொலைக்காட்சியில் பல சீரியல்களை தயாரித்துள்ளார். இவர் மருமகன் ஜெயம் ரவியை வைத்து இரண்டு மூன்று படத்தை தயாரித்தும் இருக்கிறார். ஆனால், அந்த படங்கள் சரியாக போகவில்லை.
மாமியார் தான் காரணம்: இப்போது ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் விவாகரத்து என் பேச்சு அடிபடுவதற்கு காரணமே மாமியார் சுஜாதா விஜயகுமார் தானாம். ஏன் என்றால், எந்த தயாரிப்பாளர் கதை சொல்ல வந்தாலும், ஜெயம் ரவி முதலில் மாமியாரிடம் கதை சொல்லுங்கள் அவர்கள் ஒகே என்றால், நான் கதை கேட்கிறேன் என்று சொல்லுவாராம் இதனால் கடுப்பான, தயாரிப்பாளர் யாரோ ஒருவர் கிளப்பி விட்ட கதை தான். இந்த விவாகரத்து வதந்தி இதில் கொஞ்சமும் உண்மை இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











