இலங்கை தமிழர்களை அவமானப்படுத்திய பயில்வான்.. செய்தியாளர் சந்திப்பில் நடந்த அடிதடி!

சென்னை: சர்வதேச திரைப்பட விருது வென்ற ஒற்றை பனைமரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பது குறித்து இயக்குனருக்கும் பத்திரிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பயில்வான் ரங்கநாதன் இயக்குனருக்கு ஆதரவாக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளை ஒற்றை பனைமரம் திரைப்படம் குறித்துள்ளது. இப்படத்தில் நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். RSSS பிக்சர்ஸ் சார்பில் எஸ் தணிகைவேல் தயாரித்த இப்படத்தை இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்ட இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகிறது.

otrai panai maram bayilvan ranganathan fight

ஒற்றை பனை மரம்: ஈழத்தில் நடந்த போரின் போது இறுதி நாட்களில் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சந்தித்த பிரச்னைகள் மற்றும் சொல்ல முடியாத வலிகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் 25ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

தமிழச்சிகள் அப்படிப்பட்டவர்களா: இதில் பேசிய இயக்குநர், புதியவன் ராசையா படம் குறித்து பல விஷயத்தை பேசினார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், 2010-ம் ஆண்டு நடந்ததை இந்த படத்தில் காட்டியிருக்கிறீர்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பதை காட்டவில்லையே என்றார். மேலும், இந்த படத்தை பார்த்த போது தமிழச்சி விபச்சாரம் செய்கிறார், விடுதலைப்புலிகள் அனைவரும் மாமாவாக ஆகிவிட்டார்கள் என்பது போன்ற விஷயத்தை சொல்லி, இதுதான் இலங்கையில் நடந்தது என்று சொல்ல வருகிறார்கள்.

தமிழர்களுக்கு ஏன் துரோகம் : அப்போது பேசிய இயக்குநர், எந்த நேசத்திலும் யுத்தத்திற்கு பிறகு, உரிமைக்காக போராடியவர்கள் தோல்வி அடையும் போது, அந்த சமூகம் சீர் அழிவை சந்திக்கும், அதில் நாங்கள் ஒன்றும் விதிவிலக்கு இல்லை. இந்த சூழ்நிலையில் அந்த சமூகத்தின் அவலத்தை நான் படத்தில் சொல்லி இருக்கிறேன் என்றார். இதனால், திருப்தி அடையாத அந்த செய்தியாளர், 50 வயது கொண்ட ஒரு தமிழச்சிக்கு கல்லும் தேவைப்படுகிறது. ஆணும் தேவைப்படுகிறது என்கிற விஷயத்தை இந்த படத்தில் பதிவு செய்ய என்ன காரணம்? இலங்கை தமிழர்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கும் போது அதை கெடுக்கும் வகையில் இப்படி ஒரு படம் எடுக்க என்ன காரணம்? ஒரு தமிழராக இருந்து கொண்டு இப்படி ஒரு துரோகத்தை செய்யலாமா என்று அடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

என்ன தவறு: ஒரு படைப்பு என்பது முழுமையாக இருக்க வேண்டாமா என்று கேட்க, இதற்கு இயக்குனர் புதியவன் ராசையா பதில் அளிக்கும்போது இடையில் குறுக்கிடும் பயில்வான் ரங்கநாதன், நான் படத்திற்கு முழுமையாக ஆதரவு தருகிறேன். எங்க அப்பாவும், சித்தப்பாவும் நேரடியாக பாதிக்கப்பட்டதால் இந்த படத்திற்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். நான் எனது சொந்த வாழ்க்கையில் இந்த கஷ்டத்தை பார்த்திருக்கிறேன். உண்மையை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ்நாட்டில் விபச்சாரிகள் படம் வந்ததே இல்லையா? அரங்கேற்றம் என்ற படம் முழுக்க முழுக்க விபச்சாரியை பற்றிய கதை. அதில் பெட்ரூம் லைட் அணைந்தால் தான் ரெட் லைட் விழும் என்று சொல்லியிருப்பார்கள். அப்போதெல்லாம் நாம் ஒன்றுமே பண்ணவில்லையே என்று பயில்வான் பேசினார்.

எனக்கு ஆதரவு: இதை கேட்ட, கடுப்பான செய்தியாளர்கள், இங்கு எந்த படத்தை பற்றி பேச வேண்டுமோ அந்த படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். அரங்கேற்றம் படம் இலங்கை தமிழர் படம் இல்லை. இந்த படம் நியாயமான படம் என்று பயில்வான் சொல்ல, பத்திரிக்கயைாளர் ஒருவருக்கும் பயில்வானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இடமே பரபரப்பானதால் செய்தியாளர் சந்திப்பு பாதியில் முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X