கிரிமினல் மனநோயாளி.. அவரை பத்தி சுசித்ரா அப்படி பேசவே கூடாது.. பயில்வான் ரங்கநாதன் பதிலடி!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், தனுஷ், திரிஷா உள்ளிட்ட பலர் குறித்து படுமோசமாக பாடகி சுசித்ரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்தப் பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் குறித்தும் படுமோசமாக சுசித்ரா பேசியுள்ளார். இந்நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் சுசித்ராவை கிரிமினல் மனநோயாளி என கூறியுள்ளார். மேலும், சுசித்ரா பற்றி கார்த்திக் குமார் பேசிய ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Bayilvan Ranganathan gives befitting reply to Suchitra s worst talks about celebrities

சுசித்ராவுக்கு எதிராக தனுஷ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அவரைத் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர். சுசித்ராவுக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு வரும் மற்ற நடிகர் ரசிகர்களையும் தனுஷ் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

தனுஷ் பற்றி படு மோசமாக: நடிகர் தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்கிற அளவுக்கு படுமோசமாக சுசித்ரா பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும், கமல்ஹாசன் பார்ட்டியில் போதைப் பொருள் வழங்கப்படுவதாகவும் அவர் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்தும் தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்பவே மோசமானவர் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுசித்ரா முன்வைத்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

பயில்வான் ரங்கநாதன் பற்றி: தமிழ் சினிமாவில் பிட்டு படங்களை அறிமுகம் செய்து வைத்ததே பயில்வான் ரங்கநாதன் தான் என்றும் தனுஷ் மற்றும் கார்த்திக் குமாருடன் சேர்ந்து கொண்டு தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை அவர் வெளியிட்டு வந்தார் என்றும் மேலும், படுகேவலமான நபர் அவர் என்றும் விட்டு விளாசியிருந்தார்.

உனக்கென்னமா நீ மனநோயாளி: இந்நிலையில், சுசித்ராவின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய பயில்வான் ரங்கநாதன் சுசித்ரா ஒரு கிரிமினல் மனநோயாளி அவரைப் பற்றி என்ன பேசுவது என்றும் அவர் சொல்லும் அனைத்தும் பொய்யான கருத்துக்கள் அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்றும் அவர் பேசியதற்கு வழக்கு தொடரப் போகிறேன் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

சட்டபூர்வமாக தப்பு: விவாகரத்து செய்த பின்னர் முன்னாள் கணவர் குறித்து ஆபாசமாக பேசுவது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது என்றும் தொடர்ந்து கார்த்திக் குமார் குறித்து சுசித்ரா பேசி வருவது சட்டத்தை மீறும் செயல் என்றும் ஏற்கனவே சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் நடிகர்களை அசிங்கப்படுத்தியிருந்தார் சுசித்ரா. அதுதொடர்பாக வழக்கு போடப்பட்ட நிலையில், அதிலிருந்து தப்பிக்க மனநோயாளி என்று கூறி தப்பித்தார். தற்போது, யூடியூப் பேட்டிகளில் முனிவர் போல சாபம் விடுகிறார். இவர் சாபம் விட்டால் என்ன பலிக்கவா போகிறது என பயில்வான் ரங்கநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.

மன்னிச்சிடுங்க: 6 மாதங்களுக்கு முன்பாக எனக்கு போன் செய்து பேசிய சுசித்ரா பழசை எல்லாம் மறந்து என்னை மன்னிச்சிடுங்க என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் பேட்டி கொடுப்பதாக கூறினார். நமக்கு எதுக்கு வீண் வேலை என அவர் அழைத்தும் மறுத்து விட்டேன். அந்த கோபத்தில் தான் தற்போது வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். அவர் பேசுவது சட்டப்படி குற்றம் என்பதே அவருக்கு தெரியுமா? தெரியாதா? என தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X