வனிதா விஜயகுமார், சோனியா அகர்வால் நடிச்ச படம் ரொம்ப வல்கரா இருக்கு.. பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்!
சென்னை: வனிதா விஜயகுமார், சோனியா அகர்வால், முமைத் கான் நடிப்பில் 'தண்டுபாளையம்' இந்த வாரம் வெளியாக காத்திருக்கிறது. இந்த வாரம் தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை. வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ள தண்டுபாளையம் படத்தை பார்த்து விட்டு பயில்வான் ரங்கநாதன் பத்திரிகையாளர் காட்சியில் அளித்த விமர்சனம் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவுக்கு மகளாக பிறந்தவர் வனிதா விஜயகுமார். 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மாணிக்கம் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் ஹிட்லர் பிரதர்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கில் தேவி படத்தின் மூலம் அங்கேயும் காலடி எடுத்து வைத்தார். தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த வனிதா விஜயகுமார் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என அசத்தி வருகிறார்.
வனிதா சோனியா அகர்வால் படம்: கன்னடத்தில் 3 கோடி பட்ஜெட்டில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'தண்டுபால்யா' படம் 40 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. பலாத்காரம் மற்றும் கொடூரக் கொலைகளை செய்யும் கொள்ளைக்கார கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்றன. பூஜா காந்தி அந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது அதே கான்செப்டை மையமாக வைத்து சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்துள்ள படத்துக்கு 'தண்டுபாளையம்' என பெயர் வைத்துள்ளனர். இந்த வாரம் திரையரங்குகளில் அந்த படம் வெளியாகிறது.
பயில்வான் ரங்கநாதன் பாராட்டு: சோனியா அகர்வால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். வனிதா விஜயகுமாருடன் இணைந்து தண்டுபாளையம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு டெரரான ரோல் என்றும் கழுத்தை அறுக்கும் காட்சிகளில் அசால்ட்டாக நடித்து சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார். சோனியா மற்றும் வனிதா வரும் காட்சிகள் எல்லாமே நல்லா இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் பாராட்டியுள்ளார்.
ஓவர் வல்கர்: 150 கொலைகளுக்கு மேல் செய்த 'தண்டுபாளையம்' கும்பல் சம்பவத்தை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதிகளவிலான வல்கர் காட்சிகள் நிறைந்திருக்கின்றன எனக் கூறியுள்ளார். தண்ணி கேட்பது போல வீட்டிற்கு வந்து அதன் பின்னர் பலாத்காரம் செய்து வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களை கொலை செய்து நகைகளை திருடிச் செல்லும் பெண்களின் கதை தான் இது எனக் கூறியுள்ளார்.
ஐட்டம் டான்ஸ்: முமைத் கானின் ஐட்டம் டான்ஸ் இந்த படத்துக்கு பலமாக உள்ளது என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். சில இடங்களில் தூக்கம் வந்து விடுகிறது. அப்போது இதுபோன்ற கில்மா பாடல்களை போட்டு இயக்குநர்கள் ஆடியன்ஸை தட்டி எழுப்புகின்றனர் என்றும் விமர்சித்துள்ளார்.
காசு வாங்கினேனா?: தண்டுபாளையம் படத்தின் பிரஸ் ஷோவுக்கு வந்து பேசிய பயில்வான் ரங்கநாதனிடம் பணம் வாங்கிட்டுத்தான் இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுக்கிறீங்களா என பத்திரிகையாளர் கேட்க, அது என் பழக்கமே கிடையாது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பிக் பாஸுக்கு பிறகு ஓடுதோ இல்லையோ 20 படங்களுக்கு மேல் வனிதா நடித்துள்ளார். அதில், இந்த வாரம் இந்த படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











