இரும்பு இதயமும் உருகி அழும்.. விஜய் சேதுபதியின் மகாராஜா படத்துக்கு பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்!

சென்னை: பாரதிராஜா மற்றும் விதார்த்தை வைத்து கடந்த 2017ம் ஆண்டு குரங்கு பொம்மை எனும் வித்தியாசமான படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா, திவ்யபாரதி, அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் மகாராஜா.

தென் மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை பார்த்த விமர்சகர்கள் பலரும் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் விமர்சனங்களை இன்றே சொல்லி வருவதற்கு காரணம் அப்படியாவது ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்து படத்தை வெற்றிப் படமாக ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

Review Vijay Sethupathi Maharaja Anuragh Kashyap

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறனை தொடர்ந்து பயில்வான் ரங்கநாதனும் மகாராஜா படத்துக்கு தனது விமர்சனத்தை கூறியுள்ளார். படத்தை பற்றி அவர் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்: பொதுவாகவே சினிமா பிரபலங்களின் அந்தரங்க ரகசியங்கள் குறித்து பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் அவ்வப்போது புதிய படங்களுக்கு விமர்சனமும் கொடுத்து வருகிறார். மகாராஜா படத்தை பார்த்து விட்டு அப்படியே கண்ணீர் விட்டு அழுதேன் என்றும் இரும்பு இதயமும் உருகி அழும் என்றும் பயில்வான் ரங்கநாதன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

3 படங்களின் கலவை: கதையாக பார்த்தால் தண்டுபாளையம், ஓல்டு பாய் உள்ளிட்ட சில படங்களின் கலவையாகவே தெரியும். ஆனால், படத்தின் கிளைமேக்ஸை பார்த்தால் இயக்குநர் தனது சொந்த மூளையை பயன்படுத்தி எடுத்துள்ளார் என பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் நடிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் மனுஷன் என்னம்மா உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

விஜய் சேதுபதிக்கு விருது: நிச்சயம் இந்த படம் விஜய் சேதுபதிக்கு பல விருதுகளை வாரி குவிக்கும் என்றும் படத்தில் ஆரம்பத்தில் வில்லனாக வரும் நட்டி நட்ராஜ் ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோவாகும் இடத்துக்கு மேல் படம் தீயாக இருப்பதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். விஜய் சேதுபதி தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு வில்லனை பழிவாங்கும் கதை தான் இந்த மகாராஜா படம் எனக் கூறியுள்ளார். கண்டிப்பாக ரசிகர்கள் ஓடிடியில் வெளியாகும் வரை வெயிட் பண்ணாமல் இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால் தரமான படத்தை பார்த்த உணர்வை கொடுக்கும் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X