வனிதாவை நள்ளிரவில் தாக்கியது யார்? சந்தேகத்தை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: நள்ளிரவில் தன்னை தாக்கியவர்கள் மீது வனிதா ஏன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார்.

Bayilvan Ranganathan has raised questions about who attacked Vanitha

தனது மகளுக்கு ஆதரவாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து, தனியார் ஊடகங்களில் பேசி வருகிறார்.

வனிதா மீது தாக்குதல்: இந்த நிலையில், தன்னை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டதாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்டு இருந்தார். நள்ளிரவு பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் ரெட் கார்டு கொடுக்குறீங்களா என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாக வனிதா அந்த பதிவில் கூறியிருந்தார்.

மேலும் அந்த மர்ம நபரின் சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்றும் வனிதா பதிவிட்டு இருந்தார்.

ஏன் புகார் கொடுக்கல: இதுகுறித்து, வீடியோ ஒன்றில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், நள்ளிரவில் பிரதீப்பின் ஆதரவாளர்கள் தாக்கிவிட்டதாக வனிதா கூறி இருக்கிறார். கண் வீங்கும் அளவிற்கு ஒருவர் தாக்கி இருக்கும் போது அதுகுறித்து வனிதா ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை. ஆனால், விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து அவருக்கு அழைப்பு போய் உள்ளது.

தாக்கியது யார்: இதில்,எனக்கு என்ன சந்தேகம் என்றால், தாக்கியவர்கள் மீது புகார் கொடுக்காதது ஏன், தெரிந்தவர்கள் தாக்கியதால் விவகாரம் பெரிதாகிவிடும் என்பதற்காக வனிதா புகார் கொடுக்கவில்லையா? மேலும், என்ன ஆச்சு என்று விசாரிக்க போன் செய்தவர்களிடம் இதுபற்றி பேசாதீங்க என்று கூறி தொலைபேசியை ஆப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X