மகாலட்சுமி வந்த நேரம் இப்படியா..கம்பி எண்ணும் ரவீந்திரன்.. புட்டு புட்டு வைக்கும் பயில்வான்!

சென்னை: மோசடி புகாரில் சிக்கி உள்ள தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாலாஜி என்பவர் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தார்.

Bayilvan Ranganathan has released a video on YouTube about producer Ravinder

போலீசார் நடத்திய விசாரணையில் ரவீந்திரன் பணத்தை ஏமாற்றியது தெரியவந்ததை அடுத்து அவரைபோலீசார் கைது செய்துள்ளனர்.

பண மோசடி: இவ்விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திர சேகர் சொந்த காசில் இரண்டு மூன்று படங்களை எடுத்தார். ஆனால் எந்த படமும் ஓடாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதன்பிறகு யாருக்குமே தெரியாமல் பெரிய மோசடி செய்துள்ளார். அது இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Bayilvan Ranganathan has released a video on YouTube about producer Ravinder

ஜெயிலில் ரவீந்திரன்: திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் ரவீந்திர சந்திரசேகர் பல கோடி மோசடி செய்துள்ளார். மோசடி குறித்து வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவீந்திரன் மோசடி செய்தது உண்மை என தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, இவர் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

Bayilvan Ranganathan has released a video on YouTube about producer Ravinder

விவாகரத்தானவர்: ரவீந்திரன் சந்திரசேகரின் மனைவி மகாலட்சுமி,பெயருக்கு ஏற்றார் போல உண்மையிலேயே மகாலட்சுமி மாதிரி இருப்பார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில், அவரை விவாகரத்து செய்துவிட்டு சீரியலில் நடித்து வந்தார். அப்போது தான் திருமணமான ஒருவரை மீண்டும் திருமணம் செய்து அதுபெரிய பஞ்சாயத்தாகி அதில் இருந்து மீண்டு வந்தார்.

மகாலட்சுமி வந்த நேரம் இப்படியா: இந்த நேரத்தில் தான் மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்திரன் படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான ஒரே வருஷத்திலேயே, கணவர் கம்பி எண்ணுகிறார். வீட்டுக்கு மகாலட்சுமியே மருமகளா வந்து இருக்கானு நினைச்சா, ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே என்று அவரது குடும்பத்தினர் புலம்பி வருகின்றனர் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X