நான் கேட்டது 120 கோடி.. ஆனா கொடுத்தது..ஜெயிலரில் ரஜினி வாங்கிய சம்பளம்.. பயில்வான் ரங்கநாதன் தகவல்!
சென்னை: ஜெயிலர் படத்தில் ரஜினி வாங்கிய உண்மையான சம்பளம் குறித்த தகவலை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆம் தேதி வெளியாகிய ஜெயிலர் படத்தின் அமோக வெற்றியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
பேட்ட படத்திற்கு பிறகு ஒரு முழு நீள ரஜினி படமாக ஜெயிலர் படம் இருந்ததால், படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்... மாஸ்: ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு முக்கியமான காரணம், ரஜினி மாஸ் சீன்களும் இசையும் தான். குறிப்பாக இன்டர்வெல் காட்சியில் இனிமே மூணு முகம் இல்ல ஒரே முகம்தான் என்று கர்ஜிக்கும் காட்சியில் ரஜினி மிரட்டி இருப்பார். இதனால் படத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் வேறலெவல் வரவேற்பு. வெளிநாடுகளிலும் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது ஜெயிலர் படம்.
525 கோடி: இப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூபாய். 375 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. இதையடுத்து, ஜெயிலர் படம் இரண்டாவது வாரத்தில் உலகளவில் ரூ. 525 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக. சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினி கேட்ட சம்பளம்: இந்நிலையில், சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் வாங்கிய உண்மையான சம்பளம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அதில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர்களுக்கு மட்டுமே 130 கோடி ரூபாயை சம்பளமாக கொடுத்துள்ளது. இதில் ரஜினிக்கு மட்டும் 110 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
அவருதான் டாப்: ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு 120 கோடியை சம்பளமாக கேட்டு இருந்தார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் முந்தைய படங்களின் தோல்வியை காரணம் காட்டி சம்பளத்தை 110 கோடியாக குறைத்துவிட்டது. ஆனால், விஜய் தொடர்ந்து 120 கோடியை சம்பளமாக பெற்றுவருகிறார். இதனால் தான் ரஜினி, விஜய்யைவிட கம்மி சம்பளம் வாங்குகிறார் என்று சொன்னோம் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











