Ameer - அமீர் விவகாரம்.. பாலா ஏன் வாயை திறக்கவில்லை தெரியுமா?.. சீக்ரெட் சொன்ன பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) அமீர் விவகாரத்தில் இயக்குநர் பாலா மௌனம் காப்பதற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தொடர்பான பஞ்சாயத்து கடந்த சில வாரங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு அழைப்பு வரவில்லை அதனால் செல்லவில்லை என அமீர் தெரிவிக்க; அதற்கு பிறகு பேட்டியளித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவோ, அமீருக்கு வேலை தெரியாது. பொய் கணக்கு எழுதுபவர் என தரம் தாழ்ந்து பேசினார்.

Bayilvan Ranganathan has revealed the reason behind director Balas silence on Aamirs issue

கண்டனம்: ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமீர்; இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்தவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். அதனையடுத்து சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன் ஆகியோர் ஞானவேல் ராஜாவுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். அதேபோல் கரு.பழனியப்பன், பாரதிராஜா, கஞ்சா கருப்பு, ராஜா, சேரன் ஆகியோரும் ஞானவேல் ராஜாவுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்தனர்.

வருத்தம்: நிலைமை முற்றிப்போனதை உணர்ந்த ஞானவேல் ராஜா தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார். ஆனால் அதெல்லாம் போலியான வருத்தம் ஒழுங்காக பணத்தை திருப்பி கொடுங்கள் என சமுத்திரகனி ஒரே போடாக போட்டார். இதனால் என்ன செய்வதென்று தெரியாத ஞானவேல் ராஜா அதற்கு பிறகு எதுவும் வாய் திறக்கவில்லை.

பாலாவின் அமைதி: இதற்கிடையே அமீருக்கு எதிராக ஞானவேல் ராஜா பேசியதற்கு பாலாவின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்தது. ஏனெனில் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அமீர். அதுமட்டுமின்றி இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாலாவோ இந்த விவகாரத்தில் எதுவும் சொல்லவில்லை.

Bayilvan Ranganathan has revealed the reason behind director Balas silence on Aamirs issue

பயில்வான் பேட்டி: இந்நிலையில் பாலா ஏன் அமைதி காக்கிறார் என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "அமீர் விஷயத்தில் சிவக்குமார் குடும்பம் எத்தனை நாட்கள் மௌனம் காக்கிறதோ. அத்தனை நாட்களும் அவர்களது மானம்தான் போகும். ஞானவேல் ராஜா மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அவரை நம்பி இங்கு ஃபைனான்ஸ் கொடுக்க யாரும் தயாராக இல்லை.

இதனால்தான் அமைதி: அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரகனி பேசியிருக்கின்றனர். ஆனால் இவர்களது குருவான பாலா வாயை திறக்கவில்லை. ஏனெனில் அவருக்கும் சிவக்குமார் குடும்பத்துடன் பஞ்சாயத்து இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் வாயை திறந்தால் வேண்டுமென்றே பேசுவதாக புரிந்துகொள்ளப்படும் என்பதாலும்; தன் பஞ்சாயத்தையே தீர்க்க முடியவில்லை. இதில் இந்தப் பஞ்சாயத்து வேறா என்று அவர் நினைப்பதாலும்தான் எந்த கருத்தையும் இதில் சொல்லாமல் இருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X