கௌதமி பாஜகவில் இருந்து விலக காரணம் இதுதான்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம் அவரின் சுயநலம் தான் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றியதற்கு, அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கட்சியில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இல்லை என்றும் கௌதமி குற்றம் சாட்டினார்.

Bayilvan Ranganathan has revealed the reason why Gautam left the BJP

மேலும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு விலகினார்.

கணவரை பிரிந்தார்: இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், நடிகை கௌதமி ரஜினி, கமல், சத்யராஜ், ராமராஜன் பல நடிகர்களுடன் நடித்துள்ளார். பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போது இவருக்கு திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை பிறந்த போது கணவரை பிரிந்து, குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

மார்பக புற்றுநோய்: இந்த நேரத்தில் கௌதமிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. இந்த நேரத்தில் கௌதமிக்கு உறுதுணையாக இருந்த கமல் அவருக்கு பல உதவிகளை செய்து அவரை கவனித்துக்கொண்டார். அதன் பிறகு கமல் நடிக்கும் படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக கௌதமி இருந்தார். அதன் மூலம் அவருக்கு சம்பளமும் கிடைத்தது.

இருவரும் பிரிந்தனர்: இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்தனர். என் மகளின் எதிர்காலம் கருதி நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தார். இந்த நேரத்தில் தான் மோடியை சந்தித்து பாஜகவில் இணைந்து கட்சி உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

அழகப்பன் ஏமாற்றிவிட்டார்: அழகப்பன் தன்னுடைய 25 கோடி ரூபாய் சொத்துகளை அபகரித்துக்கொண்டதாக புகார் கொடுத்திருந்தார். இதில் தொடர்புடைய அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சல் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுயநலம்: கௌதமி தனது சொத்துக்காக மட்டுமே கட்சியிலிருந்து விலகி இருக்கிறார். அது போலத்தான் மார்பக புற்றுநோய் குணமடைந்ததும் கமல்ஹாசனிடம் இருந்து விலகினார். இப்படி பல விஷயத்தில் கௌதமி சுயநலத்துடன் தான் இருக்கிறார். அவர் கட்சியிலிருந்து விலகக் காரணம் அவரின் சுயநலம் தான் என்று பயில்வான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X