அஜித் ஒரு வருஷம் நடிக்க மாட்டார்.. அதிர்ச்சி தகவலை சொன்ன பயில்வான்.. இதுதான் காரணமா?
சென்னை: நடிகர் அஜித் கைவசம் இரண்டு திரைப்படங்கள் உள்ள நிலையில், விடாமுயற்சி முடித்தபின் குட் பேட் அக்லி படத்தையும் கையோடு முடித்துவிட்டு, மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் அந்த சிகிச்சை முடிந்த பிறகு ஒரு வருடத்திற்கு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கோடான கோடி ரசிகர்களை கொண்ட அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, ஆரவ், ரெஜினா, ஆக்ஷன் கிங் அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே ஒரே பிரச்சனை தான். இப்படத்தின் நடித்துக்கொண்டிருக்கிறது.

நடிகர் அஜித்: கடந்த மார்ச் மாதம், நடிகர் அஜித்திற்கு திடீரென சென்னை, அப்பலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக அஜித்தின் மூளையில் ஒரு சிறிய கட்டி இருப்பது தெரியவந்ததாகவும், இதையடுத்து மதுரை மற்றும் கேரளாவில் இருந்து 2 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அஜித்திற்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஒரு ஆப்ரேஷன் செய்ய இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
பயில்வான் ரங்கநாதன்: அந்த வீடியோவில், இது தமிழ் சினிமாவிற்கு போதாத காலம், நடிகை சமந்தா, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அவர் கடந்த ஒரு வருடமாக ஓய்வில் இருந்து வருகிறார். அதே போல, அஜித் வழக்கம் போது உடல் பரிசோதனை செய்த போது, அவர் மூளையில் சிறிய கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அறுவை செய்து ஆறுமாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து, தற்காலிகமாக ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஷாலினிக்கு ஆபரேஷன்: இதைத்தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் என்றார். அப்போது, ஷாலினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்த, படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனியாக சென்னைவந்துவிட்டு மனைவியை பார்த்துவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் மீண்டும் அஜர்பைஜான் சென்ற நிலையில், மீண்டும் ஷாலினிக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
மீண்டும் ஆபரேஷன்: தற்போது,அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, குட் பேட் அக்லி படத்திற்கு தேதி கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு அஜித் தொடர்ந்து மூன்று மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்தின் வேலையை முடித்துவிட்டு அஜித் மீண்டும் மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்தால் கட்டாயம் ஒரு வருடம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால், குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் ஒரு வருடம் ஓய்வில் இருப்பார் என்று தகவல் வெளியாகி இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











