தனுஷ் - ஐஸ்வர்யா மனநிலையில் மாற்றம்?.. மகனை யோசித்த ஜோடி மீண்டும் சேர்கிறார்கள்?.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: கோலிவுட்டில் கடந்த சில காலமாகவே விவாகரத்துகள் அதிகரித்துவருகின்றன. அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு தங்களது பிரிவை அறிவித்த தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம். இதனால் அவர்களது திருமண பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தச் சூழலில் அவர்கள் இரண்டு பேர் குறித்தும் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் செலிபிரிட்டிகளின் விவாகரத்து அதிகரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் - சைந்தவி, ஜெயம் ரவி - ஆர்த்தி, டி.இமான் - மோனிகா, ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டு செல்கிறது. இந்த லிஸ்ட்டில் முதலில் இருந்தது தனுஷும்,ஐஸ்வர்யாவும்தான். அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பே தங்களது பிரிவை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்கள். காதல் திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்ற பிறகு ஏன் இந்த முடிவு என்று பலரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார்கள்.

சட்டப்பூர்வ விவாகரத்து: எப்படியாவது சேர்ந்துவிடுவார்கள் என்று பலரும் நினைத்திருந்த சூழலில் சென்னை குடும்பநல நீதிமன்றம் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்களது திருமண பந்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த விவாகரத்தால் ரஜினிகாந்த் ரொம்பவே அப்செட்டாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் தனுஷுக்கு அவரது தந்தை கஸ்தூரி ராஜா கண்டிப்பாக இரண்டாவது திருமணம் செய்துவைப்பார் என்றும் கூறப்படுகிறது.

பிள்ளைகள் யாருடன்: இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும் அவர்களின் மகன்களாக யாத்ராவும், லிங்காவும் யாருடன் இருப்பார்கள் என்பது இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கோ பேரண்ட்டிங் முறையில் அவர்களை தனுஷும், ஐஸ்வர்யாவும் வளர்ப்பார்கள். இருவரிடமுமே இரண்டு மகன்களும் நல்ல புரிதலில்தான் இருக்கிறார்கள். குறிப்பாக இந்தப் பிரிவை அவர்கள் புரிந்துகொள்ளும் பக்குவத்தில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இதனை புரிதலோடு கடந்துசெல்வார்கள் என்று கூறப்படுகிறது.

Bayilvan Ranganathan has said that Dhanush and Aishwarya will live together again for the sake of their son

மீண்டும் இணைந்த ஜோடி: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு பிறந்த மூத்த மகன் யாத்ரா சர்வதேச பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். அந்த பட்டம் வாங்கும் நிகழ்வில் தனுஷும், ஐஸ்வர்யாவும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. மேலும் நீண்ட நாட்கள் கழித்து மகனுக்கு ஒரு நிகழ்ச்சியில் சேர்ந்து கலந்துகொண்டதற்கு அவர்களுக்கு வாழ்த்தும் பலர் தெரிவித்தார்கள்.

பயில்வான் பேட்டி: இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா குறித்து பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து என்று அறிவிப்பு வந்தவுடன் ரஜினி, தனுஷ் ஆகியோரின் ரசிகர்கள்ல் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். இருப்பினும் அவர்கள் கணவனும், மனைவியும் விவாகரத்தின்போதூ மிகுந்த கண்ணியத்துடன் நடந்துகொண்டார்கள்.

மீண்டும் இணையும் ஜோடி?: மகனின் பட்டமளிப்பு விழாவுக்கு இருவரும் வந்தார்கள். அந்த நிகழ்வில் அவர்கள் இரண்டு பேரும் அருகருகில் அமர்ந்துகொண்டார்கள். தங்களுடைய மகனுக்காக அவர்கள் தங்களிடம் இருந்த ஈகோ, பிடிவாதம் ஆகியவைகளை தளர்த்திக்கொண்டு அங்கு வந்திருந்தார்கள். அது ரஜினிக்கு சந்தோஷம். இரண்டு பேரும் ஒரு முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அதாவது போய்ஸ் கார்டனில் இருக்கும் பங்களாவில் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களுடைய மகன்களுக்காக சேர்ந்து வாழப்போகிறார்களாம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X