கண்ணீர் விட்டு கதறிய ரஜினி.. மனமாறிய தனுஷ்-ஐஸ்வர்யா.. பிரபலம் சொன்ன குட் நியூஸ்!

சென்னை: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 17ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2021ம் ஆண்டு முதல் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மனக்கசப்புகளை மறந்து சேர்ந்து வாழ இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு பிரித்தனர். இவர்களை சமாதானப்படுத்த ரஜினி எவ்வளவு முயற்சி செய்தும் இருவரும் சமாதானம் ஆகவில்லை. தனுஷ் போயஸ்கார்டன் வீட்டில் கிரகபிரவேசம் செய்த போதும், அதில் ஐஸ்வர்யாவோ, ரஜினியோ கலந்து கொள்ளவில்லை. ஆனால், யாத்ரா, லிங்கா இருவரும் கலந்து கொண்டனர்.

dhanush aishwarya rajinikanth

கெஞ்சிய லதா: இந்த நேரத்தில் தான் ரஜினி கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ரஜினி, லதாவிடம் ஐஸ்வர்யாவை நினைத்து மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, லதா ஐஸ்வர்யாவிடம், அப்பா சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், நீ உன் ஈகோவைவிட்டு தனுஷூடன் வாழ வேண்டும். கணவன் மனைவியாக வாழவில்லை என்றாலும், நல்ல பெற்றோராக வாழுங்கள் என கெஞ்சி கேட்டுள்ளார்.

கண்ணீர் விட்ட ரஜினி: இதையடுத்து, ஐஸ்வர்யா, போயஸ் கார்டனில் உள்ள தனுஷ் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசி உள்ளார். இதனால், தனுஷ் மனம் சற்று இறங்கி உள்ளது. இதையடுத்து, ரஜினி, தீபாவளிக்கு தனது வீட்டுக்கு தனுஷ், ஐஸ்வர்யா இருவரையும் அழைத்து பேசி உள்ளார். அப்போது, சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் சந்தோஷமா வாழ்ந்து வருகிறார். ஆனால், நீங்கள் இப்படி இருப்பதை நினைத்து, நான் மிகவும் வேதனை அடைகிறேன் என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

விரைவில் குட் நியூஸ்: அப்பா அழுததைப்பார்த்த ஐஸ்வர்யாவும் ரஜினியை கட்டிப்பிடித்து அழுது, உங்களுக்காகவும், மகன்களுக்காகவும் மீண்டும் சேர்ந்து வாழ்வதாக கூறியுள்ளார். இதையடுத்து,தனுஷ், ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி உள்ளார். இதையடுத்து, குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும், மீண்டும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்கிறோம் என்று அறிக்கை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தனுஷின் இட்லிக்கடை படப்பிடிப்பை பத்து நாட்களுக்கு தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் நல்ல செய்து வரும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X